TNPSC Current Affairs Question and Answer in Tamil 8th August 2018

Current Affairs in Tamil 8th August 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 8th August 2018. Take the quiz and improve your knowledge.



TNPSC Current Affairs 8th August 2018

1. சமீபத்தில், பல வகைகளில் பணம் செலுத்தக்கூடிய “MOPAD” என்ற இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள வங்கி?

  1. SBI
  2. AXIS
  3. ICICI
  4. HDFC
Answer & Explanation
Answer: SBI

Explanation:

சமீபத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி பல வகைகளில் பணம் செலுத்தக்கூடிய “MOPAD [ Multi-Option Payment Acceptance Device]” என்ற இயந்திரத்தை(Card Swiping Machine) அறிமுகப்படுத்தியுள்ளது.

வழக்கமான இயந்திரகள் Debit, Cridit கார்ட்களை மட்டும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும், ஆனால் இந்த இயந்திரத்தில்  Debit Card, Cridit Card,  Bhart QR, UPI, SBI Buddy போன்ற பல வழிகளில் பணம் செலுத்த முடியும்.

TNPSC Group 2 Model Question Papers – Download

2. “முபாதலா கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில்” சாம்பியன் பட்டம் வென்றவர்?

  1. மரியா சக்கரி
  2. மிஹேலா புஸார்னெஸ்கு
  3. வீனஸ் வில்லியம்ஸ்
  4. ஹீதர் வாட்சன்
Answer & Explanation
Answer: மிஹேலா புஸார்னெஸ்கு

Explanation:

அமெரிக்காவில் நடைபெற்ற முபாதலா கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரோமானிய வீராங்கனை மிஹேலா புஸார்னெஸ்கு, கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

3. சமீபத்தில் “பொருட்கள் மறுசுழற்சி : கொள்கை வழிகாட்டுதல் மூலம் நீடித்த வளர்ச்சி குறித்த நிதி ஆயோக்கின்” சர்வதேச மாநாடு நடைபெற்ற இடம்?

  1. சென்னை
  2. பெங்களூர்
  3. பாம்பே
  4. புதுடெல்லி
Answer & Explanation
Answer: புதுடெல்லி

Explanation:

நிதி ஆயோக்கின் “Sustainable Growth through Material Recycling: Policy Prescriptions” சர்வதேச மாநாடு ஆகஸ்ட் 6 அன்று புதுடெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோள் “பொருட்கள் மறுசுழற்சிக்கான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான கொள்கைகளை அடையாளம் காணுதல் ஆகும்.

  • நிதி ஆயோக் துணைத் தலைவர் திரு. ராஜீவ் குமார்
  • நிதி ஆயோக் முதன்மை செயல் அதிகாரி திரு. அமிதாப் காந்த்

4. “Academia Alliance Programme” என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது இந்திய அமைப்பு?

  1. Make in India
  2. Startup India
  3. Standup India
  4. Made in India
Answer & Explanation
Answer: Startup India

Explanation:

தொழில் முனைவோர்களின் மனநிலையை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஸ்டார்ப் இந்தியாவானது “Academia Alliance Programme” என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் கல்வி அறிஞர்களுக்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கும் வழிகாட்டுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரப்படும்

5.  தேசிய கைத்தறி தினம் எப்போது அனுசரிகப்டுகிறது?

  1.  ஆகஸ்ட் 5
  2. ஆகஸ்ட் 6
  3. ஆகஸ்ட் 7
  4. ஆகஸ்ட் 8
Answer & Explanation
Answer: ஆகஸ்ட் 7

Explanation:

கைத்தறி நெசவாளர்களை கவுரவிப்பதற்காக ஆண்டு தோறும் ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினமாக அனுசரிகப்டுகிறது.

முதல் கைத்தறி தினம் ஆகஸ்ட் 7, 2015 இல் சென்னையில் துவங்கிவைக்கப்பட்டது.

மேலும் சில.,

வங்கப்பிரிவினைக்கு எதிராக கொல்கத்தாவின் டவுன்ஹாலில் ஆகஸ்ட் 7, 1905  அன்று ஆரம்பிக்கப்பட்ட சுதேசி இயக்கத்தினை போற்றும் வகையில் 2015 முதல் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.

6. சமீபத்தில் கோவாவின் சுற்றுலா துறை அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் செயலி?

  1. GOAMILES
  2. MYGOA
  3. FLYGOA
  4. GOADIR
Answer & Explanation
Answer: GOAMILES

Explanation:

சமீபத்தில் மொபைல் செயலி அடிப்படையிலான டாக்சி சேவையை கோவாவின் சுற்றுலா துறை தொடங்கியுள்ளது, இந்த செயலிக்கு “GoaMiles” எனப் பெயரிடப்பட்டுள்ளது

7. சமீபத்தில் இந்தியாவின் மிகவும் காற்று மாசடைந்த நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம்?

  1. மும்பை
  2. கான்பூர்
  3. குருகிராம்
  4. பரிதாபாத்
Answer & Explanation
Answer: குருகிராம்

Explanation:

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின்(CPCB) சமீபத்திய அறிக்கையின்படி ஹரியானா மாநிலத்தில் உள்ள “குருகிராம்” (Gurugram) நகரம் இந்தியாவின் மிகவும் காற்று மாசடைந்த நகரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. “Uakitite” என்பது புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட?

  1. தாதுப்பொருள்
  2. குறுங்கோள்
  3. பாக்டீரியா
  4. எலி இனம்
Answer & Explanation
Answer: தாதுப்பொருள்

Explanation:

ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் சைபிரியாவில் விழுந்த விண்கல்லில் (Meteorite) இருந்து “Uakitite” என்ற புதிய தாதுப்பொருளை கண்டறிந்துள்ளனர். 2016-ஆம் ஆண்டு சைபிரியாவில் விழுந்த விண்கல்லில் வைரத்தை விட கடினமான பொருள் இருப்பதை ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர் அதற்கு சமீபத்தில் “Uakitite” என்று பெயரிட்டுள்ளனர்.

More TNPSC Current Affairs

TNPSC Current Affairs in Tamil – 7th August 2018
TNPSC Current Affairs in Tamil – 6th August 2018
TNPSC Current Affairs in Tamil – 5th August 2018



Leave a Comment