TNPSC Current Affairs Question and Answer in Tamil 8th December 2018

Current Affairs in Tamil 8th December 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 8th December 2018. Take the quiz and improve your knowledge.



1.  சமீபத்தில் இந்திய கடலோர காவல்படை எந்த இடத்தில் “தூய்மையான கடல் – 2018” என்ற பெயரில் ஒத்திகை பயிற்சியி மேற்கொண்டது?

  1. கல்கத்தா
  2. போர்ட்பிளேயர்
  3. விசாகப்பட்டினம்
  4. கொச்சின்
Answer & Explanation
Answer: போர்ட்பிளேயர்

Explanation:

இந்திய கடலோர காவல்படை “தூய்மையான கடல் – 2018” என்ற பெயரில் கடல் எண்ணெய் மாசுபாட்டை எதிர்கொள்வதற்கான பிராந்திய ஒத்திகை பயிற்சியை அந்தமானின் போர்ட்பிளேயரில் மேற்கொண்டது.

TNPSC Group 2A Model Question Papers – Download

2. சமீபத்தில் “சர்வதேச கரடிகள் மாநாடு” நடைபெற்ற மாநிலம்?

  1. பஞ்சாப்
  2. உத்திரபிரதேஷ்
  3. ராஜஸ்தான்
  4. குஜராத்
Answer & Explanation
Answer: உத்திரபிரதேஷ்

Explanation:

Wildlife SOS என்ற அமைப்பு உத்திரபிரதேஷ மாநிலம் ஆக்ராவில் முதலாவது “சர்வதேச கரடிகள் மாநாடு” (International Conference on Bears)  டிசம்பர் 3 முதல் 6 வரை  நடைபெற்றது.

3. சமீபத்திய  தினமணி பத்திரிகையின் ”மகாகவி பாரதியார் விருது” யாருக்கு வழங்கப்பட உள்ளது?

  1. கலாப்ரியா
  2. எம். குப்புசாமி
  3. சீனி. விஸ்வநாதன்
  4. கி.வைத்தியநாதன்
Answer & Explanation
Answer: சீனி. விஸ்வநாதன்

Explanation:

தினமணி பத்திரிகையின் முதலாவது ”மகாகவி பாரதியார் விருது” சீனி. விஸ்வநாதனுக்கு வழங்கப்பட உள்ளது

4.  2017ஆம் ஆண்டில், உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் முதலிடம் வகிக்கும் நாடு?

  1. அமெரிக்கா
  2. சீனா
  3. ஐரோப்பிய யூனியன்
  4. இந்தியா
Answer & Explanation
Answer: சீனா

Explanation:

குளோபல் கார்பன் ப்ராஜெக்ட் ஆய்வின்படி உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் சீனா (27%) முதலிடத்திலும், 2வது இடத்தில் அமெரிக்காவும் (15%), 3வது இடத்தில் ஐரோப்பிய யூனியனும் (10%), 4வது இடத்தில் இந்தியாவும் (7%) உள்ளன.

5.  2018 ஆம் ஆண்டுக்கான கலிங்கா உலக மண் விருதை பெற்றுள்ளவர்?

  1. எம்.ஏ. லதீப்
  2. ராபின் கே. தோவான்
  3. ராஜானிஷ் கிரி
  4. ரத்தன் லால்
Answer & Explanation
Answer: ரத்தன் லால் (Ratan Lal)

Explanation:

அமெரிக்க வாழ் இந்தியரான பேராசிரியர் ரத்தன் லாலுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான கலிங்கா உலக மண் விருது (Glinka world soil Prize) வழங்கப்பட்டுள்ளது.

மேலும், முதலாவது “உலக மண் தின விருதானது” பங்களாதேஷின் ப்ராக்டிக்கல் ஆக்சன் (Practical Action) என்ற அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது

6. சமீபத்தில் சீனாவின் “ஒரு பட்டை ஒரு சாலை” இணைந்த மத்திய அமெரிக்க நாடு?

  1. கோஸ்ட்டா ரிக்கா
  2. எல் சல்வடோர்
  3. பனாமா
  4. நிகராகுவா
Answer & Explanation
Answer: பனாமா

Explanation:

சீனாவின் “One Belt One Road” திட்டத்தில் மத்திய அமெரிக்காவின் முதல் நாடாக பனாமா இணைந்துள்ளது.

“One Belt One Road” என்பது ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் சீனாவின் பொருளாதார திட்டம் ஆகும்.

7. சமீபத்தில், இந்தியாவிற்கு கச்சா எண்ணையை ரூபாயில் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நாடு ?

  1. ஈரான்
  2. ஈராக்
  3. ஓமன்
  4. ஆப்கனிஸ்தான்
Answer & Explanation
Answer: ஈரான்

Explanation:

இந்தியாவிற்க்கான, கச்சா எண்ணை இறக்குமதி பணபரிமாற்றத்தை ரூபாய் மதிப்பில் செய்ய ஈரான் அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

8. சமீபத்தில், சீனாவில் நடைபெற்ற உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்?

  1. காமாட்சி
  2. கே.தர்ஷினி
  3. கோகுலேஷ்
  4. சித்திரைச்சாமி
Answer & Explanation
Answer: கே.தர்ஷினி

Explanation:

சீனாவில் நடைபெற்ற உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் திருவாரூரை சேர்ந்த மாணவி கே.தர்ஷினி தங்கப்பதக்கம் வென்றார்.

9. சர்வதேச உள்நாட்டு விமான போக்குவரத்து தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 4th டிசம்பர்
  2. 5th டிசம்பர்
  3. 6th டிசம்பர்
  4. 7th டிசம்பர்
Answer & Explanation
Answer: டிசம்பர் 7

Explanation:

சர்வதேச உள்நாட்டு விமான போக்குவரத்து தினமானது [International Civil Aviation Day (ICAO)] ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Working Together to Ensure No Country is Left behind

More TNPSC Current Affairs



Leave a Comment