TNPSC Current Affairs Question and Answer in Tamil 9th December 2018

Current Affairs in Tamil 9th December 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 9th December 2018. Take the quiz and improve your knowledge.



1.  சமீபத்தில், கேரள மாநிலத்திற்கு குறைந்த வட்டியில் ரூ.720 கோடி வழங்க முன்வந்துள்ள நாடு?

  1. இங்கிலாந்து
  2. சவூதி அரேபியா
  3. ஓமன்
  4. ஜெர்மனி
Answer & Explanation
Answer: ஜெர்மனி

Explanation:

கேரள மாநிலத்திற்கு குறைந்த வட்டியில் ரூ.720 கோடி வழங்க ஜெர்மனி அரசு முன்வந்துள்ளது. பெரும்மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மறுசீரமைப்பு செய்வதற்கா இந்த தொகை வழங்கப்பட உள்ளது.

TNPSC Group 2A Model Question Papers – Download

2. சமீபத்திய அறிகைப்படி “உலக அளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியலில்” முதலிடம் வகிக்கும் நாடு?

  1. இந்தியா
  2. பங்களாதேஷ்
  3. பாகிஸ்தான்
  4. சீனா
Answer & Explanation
Answer: இந்தியா

Explanation:

உலக சுகாதார நிறுவனத்தின் Global Status Report on Road Safety என்ற அறிகைப்படி “உலக அளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியலில்” இந்தியா  முதலிடம் வகிக்கிறது.

இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

3. சமீபத்தில், 2018ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளவர்?

  1. மனுஷி சில்லர்
  2. டயானா ஹெய்டன்
  3. வனசா பொன்ஸ் டி லியோன்
  4. மேரி ஸ்டாவின்
Answer & Explanation
Answer: வனசா பொன்ஸ் டி லியோன்

Explanation:

சீனாவில் நடைபெற்ற 2018ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியோன் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

இந்த போட்டியில் டாப் – 10 அழகிகள் வரிசையில், திருச்சியை சேர்ந்த ஸ்டெபி அமல்யா, ஆறாவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

4.  வெளிநாடுகளில் பணிபுரிந்து சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பி வைப்போர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு ?

  1. பிலிப்பைன்ஸ்
  2. சீனா
  3. மெக்ஸிகோ
  4. இந்தியா
Answer & Explanation
Answer: இந்தியா

Explanation:

வெளிநாடுகளில் பணிபுரிந்து சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பி வைப்போர் பட்டியலில் இந்தியா (57.10 லட்சம் கோடி) முதலிடம் வகிக்கிறது.

அதனை தொடர்ந்து.,

2. சீனா (47.81 லட்சம் கோடி)

3. மெக்ஸிகோ (24.26 லட்சம் கோடி)

4. பிலிப்பைன்ஸ் (24.26 லட்சம் கோடி)

5. எகிப்து (18.55 லட்சம் கோடி)

5.  சமீபத்தில், யாருக்கு ஹோர்வர்ட் பல்கலைக்கழகத்தின் க்ளிட்ச்மன் (Gleitsman) சர்வதேச செயல்வீரர் விருது வழங்கப்பட்டது?

  1. ஜான் லூயிஸ்
  2. மலாலா யூசுஃப்சாய்
  3. ராஜானிஷ் கிரி
  4.  மேரி கோம்
Answer & Explanation
Answer: மலாலா யூசுஃப்சாய்

Explanation:

பாகிஸ்தானின் மலாலா யூசுஃப்சாய்க்கு ஹோர்வர்ட் பல்கலைக்கழகத்தின் க்ளிட்ச்மன் (Gleitsman) சர்வதேச செயல்வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.

6. சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?

  1. உய்லி மவுரர்
  2. பேஜி கெய்ப் எசெப்ஸி
  3. டோரிஸ் லுதார்டு
  4. நிக்கோலஸ் சர்கோஜி
Answer & Explanation
Answer: உய்லி மவுரர்

Explanation:

சுவிட்சர்லாந்து நாட்டின் அடுத்த ஓராண்டு காலத்துக்கு அதிபராக அந்த நாட்டின் நிதி மந்திரியாக இருந்து வரும் உய்லி மவுரர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

7. சமீபத்திய நிலவரப்படி, இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு?

  1. ஈரான்
  2. ஈராக்
  3. கத்தார்
  4. ஆஸ்திரேலியா
Answer & Explanation
Answer: ஆஸ்திரேலியா

Explanation:

டிசம்பர் 7 நிலவரப்படி, இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம் வகிக்கிறது. இதற்கு முன்னர் கத்தார் நாடு முதலிடம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

8. “அஜய் ரோக்கரா” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்.?

  1. செஸ்
  2. பாட்மிட்டன்
  3. நீச்சல்
  4. கிரிக்கெட்
Answer & Explanation
Answer: கிரிக்கெட்

Explanation:

சமீபத்தில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ள மத்திய பிரதேச வீரர் “அஜய் ரோக்கரா” தனது முதல் போட்டியிலேயே 267 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதன் முலம் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்த சாதனையை இந்தூரில் நடைபெற்ற ஹைதராபாத் – மத்திய பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டத்தில் நிகழ்த்தியுள்ளார்.

9. தேசிய நீர்மூழ்கிகப்பல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 6th டிசம்பர்
  2. 7th டிசம்பர்
  3. 8th டிசம்பர்
  4. 9th டிசம்பர்
Answer & Explanation
Answer: டிசம்பர் 8

More TNPSC Current Affairs



Leave a Comment