ஊரடங்கு காலத்தில் போட்டி தேர்வர்கள் செய்ய வேண்டியவை
1. வீட்டுக்குள்ளே முடங்கி கிடப்பது நமக்கு புதிது ஒன்றும் இல்லை.ஆனால் கரோனா எனும் Pandemic ஐ விட அது குறித்த Infodemic எனும் கொள்ளை செய்திகள் தான் நம்மை உளவியல் ரீதியாக தாக்கும் ஆயுதம்.நாளின் முடிவில் மட்டும் நிலவரம் என்ன என்பதை அறிந்துகொண்டு மீதி நேரத்தில் வழக்கம்போல் எப்போதும் படிப்பதை தொடருங்கள்
2. கரோனா நேரத்தில் முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் வரும் பொய் செய்திகளையும் வெறுப்பு உமிழ்வுகளையும் படிப்பதை தவிருங்கள். நாளைய அரசு அலுவலர் என்ற நிலையில் செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து உண்மையை எடுத்து கூறும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது
3. தேவையில்லாமால் வெளியே சென்று போலீசிடம் சென்று வழக்கில் சிக்கி வாழ்க்கையை தொலைக்க வேண்டாம். உங்கள் வீர தீரத்தை காட்ட வேண்டிய நேரம் இதுவல்ல
4.பாடத்திட்டம் மாற்றம் என்ற ஒன்று உங்களை படிக்க விடாமல் செய்யும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் பொது அறிவு என்ற ஒன்றை தவிர்த்து பாடத்திட்டம் இருக்க போவதில்லை. எனவே பொது அறிவு பகுதியான வரலாறு,புவியியல்,அரசியல் அமைப்பு,அறிவியல்,பொருளாதாரம்,நட்பு நிகழ்வுகள் பகுதியை படித்து கொண்டே இருங்கள்.
5. தேர்வாணையத்தில் அதிகாரிகள் நியமனம் போன்றவை வழக்கமாக நடக்கும் ஒன்று. அவர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்ற கவலை நமக்கு வேண்டாம். தேர்வாணையம் நேர்மையாகவே செயல்படும். ஒரு சில ஓட்டைகள் இருக்க தான் செய்கிறது.மறுப்பதிற்கில்லை. “அந்த ஓட்டை ஒன்னு தான் நான் படிக்காம இருக்க காரணம்” என்று நீங்கள் நினைத்தால் இழக்க போவது நீங்களே..
6. கரோனா நிலைமை சீரானதும் அணைத்து தேர்வாணையங்களும் தங்கள் பணிகளை முடுக்கி விடும் என்பதால் தேர்வுகள் விரைவாக வைக்கவே முயற்சிப்பர். தயாராக இருக்கும் படி படித்துக்கொண்டே இருங்கள்
7. Post Corona பொருளாதார நிலைமை சீராகுமோ இல்லையோ.. அரசு என்ற ஒன்று இயங்க எப்போதும் பணியாளர்கள் தேவை என்பதால் காலிப்பணியிடங்கள் நிரப்ப தேர்வுகள் கட்டாயம் இருக்கும். எனவே படிப்பதை நிறுத்த வேண்டாம்
8. பயிற்சி நிலையங்கள் கிட்டத்தட்ட 50 நாட்கள் மூடி இருப்பதால் பாடத்திட்டத்தை முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். கொடுத்த பணத்திற்கு சரியாக வகுப்புகளை முடித்து தர வேண்டியது அவர்களின் பொறுப்பு. ஆன்லைன் வகுப்புகளை அனுப்ப சொல்லி நீங்கள் கேட்கலாம். அவர்கள் செய்து தந்து இருக்க வேண்டும் இதற்குள்.
9. தொடர்ந்து ஒரே நாள் முழுவதும் படிக்க முடியாது. எனவே திரைப்படங்கள்,பாடல்கள்,உலக தர சினிமாக்கள் போன்றவற்றை பார்க்கலாம். தொடர்ந்து நாள் முழுக்க அதையே பாக்கவும் கூடாது. பிறகு addict ஆகி அதில் இருந்து வெளியே வருவது கடினம்
10. எதிர்மறை சிந்தனைகள் மட்டுமே இப்போது நம்மை சூழ்ந்து இருக்கும் என்பதை மறுக்க இயலாது. ஆனால் நிலைமை சீரான உடன் யார் தயாராக இருகிறார்களோ அவர்களே அரசு வேலையே முதலில் தட்டி செல்வர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அன்புடன்
வெ.சிவ ஆனந்த கிருஷ்ணன்
respected sir,
thank you so much for ur motivation message to all the students who are all preparing for competitive exam
thank you sir, your message is really motivating me and all the students who are all preparing for the competitive exam. I like your last 2 points,because you didn’t force us to study or tell rudely.you say study and few times watch a entertaining things.i assure you we don’t waste our time in social media.