TNPSC குரூப் 4 தேர்வு 2023 | பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2023

TNPSC குரூப் 4 தேர்வு 2023 பற்றிய முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

அதாவது அடுத்த தேர்வு தேதி, தேர்வு எழுதுவதற்கான தகுதிகள், பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள்கள் என அனைத்தையும் பார்க்கலாம்.

Group 4 Result Published – Check Here

குரூப் 4 தேர்வு என்றால் என்ன?

குரூப் 4 தேர்வு என்பது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) மேற்க்கொள்ளப்படும் ஒரு வகையான தகுதி தேர்வாகும்.

இத்தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் (பிணையம்), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர் போன்ற பதிவிகளுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மேலும் இந்த ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசைமாற்று வாரியம் போன்ற சில துறைகளின் காலிப் பணியிடங்களும் குரூப் 4 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வை TNPSC ஆண்டுத்தொறும் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வு பற்றி இங்கு பார்ப்போம்.

Read in English – Click Here

குரூப் 4 தேர்வு ஓர் சிறு அலசல்

தேர்வின் பெயர் TNPSC Group 4
பதவியின் பெயர் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரை வாளர், மற்றும் நில அளவர்
தேர்வு முகமை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
காலிப்பணியிடங்கள் 7301+
கல்வி தகுதி பத்தாம் வகுப்பு
சம்பளம் ரூ. 19500 – ரூ. 75900 (முழுவிவரம்)
அதிகாரபூர்வ அறிக்கை  முழுவிவரம்




குரூப் 4 தேர்வு முக்கிய நாட்கள்

இந்த ஆண்டு குரூப் 4 தேர்வானது 24 ஜூலை 2022 அன்று நடைபெற்றது. அடுத்த குரூப் 4 தேர்வானது 2024ஆம் ஆண்டு பிப்ரவரி-யில் நடத்தப்படும் என தேர்வு கால அட்டவணை (Annual Planner) – யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு வெளியாகும் நாள்  நவம்பர் 2023
விண்ணப்பம் தொடங்கும் நாள் நவம்பர் 2023
விண்ணப்பிக்க இறுதி நாள் டிசம்பர் 2023
குரூப் 4 தேர்வு நாள் பிப்ரவரி 2024
தேர்வு முடிவு வெளியாகும் நாள்
மே 2024

குரூப் 4 தேர்வு 2022

அறிவிப்பு வெளியாகிய நாள்  29 மார்ச் 2022
விண்ணப்பம் தொடங்கிய நாள் 30 மார்ச் 2022
விண்ணப்பிக்க இறுதி நாள் 28 ஏப்ரல் 2022
குரூப் 4 தேர்வு நடைபெற்ற நாள் 24 ஜூலை 2022
தேர்வு முடிவு வெளியாகும் நாள்  ஜனவரி 2023

குரூப் 4 தேர்வு எழுத தகுதிகள்

கல்வி மற்றும் வயது ஆகியவை இத்தேர்வை எழுதுவதற்கான அடிப்படை தகுதி ஆகும்.

இத்தேர்வை எழுத குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதை பொறுத்தவரையில், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.

மேலும் அதிகபட்ச வயதானது விண்ணப்பதாரரின் கல்வி மற்றும் பிரிவை (Community) பொறுத்து மாறுபடும்.

வயது வரம்பு

பிரிவு

10ஆம் வகுப்பு மட்டும்
படித்தவர்களுக்கான
அதிகபட்ச வயது

பொது பிரிவினர்  30 +2
MBC, BC, BC(M) 32 +2
SC, SC(A), ST 35 +2
ஆதரவற்ற விதவைகள் 35 +2


பொதுப்பிரிவினர் தவிர மற்ற பிரிவை சேர்ந்த 10ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்களுக்கு அதிகபட்ச வயது 56 ஆகும்.



டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறை

குரூப் 4 தேர்வானது 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இத்தேர்வானது இரண்டு பகுதிகளை கொண்டது.

பாடப்பெயர் வினாக்கள் எண்ணிக்கை மதிப்பெண்
பொது தமிழ் 100 150
பொது அறிவு   75 112.5
கணிதம்  25 37.5
மொத்தம் 200 300
Note: கடந்த காலங்களில், தேர்வர்கள் பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்துகொள்ளும் வகையில் இருந்தது. ஆனால் தற்போது பொதுஆங்கிலம் நீக்கப்பட்டு, பொதுத்தமிழ் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு 2023 பாடத்திட்டம்

குரூப் 4 பாடத்திட்டத்தை (Syllabus) 10 ஆம் வகுப்பு தரத்தில் வடிவமைத்துள்ளது TNPSC.

TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தின் சுருக்கிய வடிவத்தை கீழே கொடுக்கின்றோம், பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொது தமிழ்

  • இலக்கணம்
  • இலக்கியம்
  • தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

பொது அறிவு / General Studies

  • பொது அறிவியல்
  • நடப்புநிகழ்வுகள்
  • புவியியல்
  • இந்திய அரசியல்
  • இந்தியா & தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு
  • இந்திய பொருளாதாரம்
  • இந்திய தேசிய இயக்கம்
  • திறனறிவு மற்றும் புத்திகூர்மை தேர்வு

முழு பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்ய – Click Here



FAQ’s – டிஎன்பிஎஸ்சி குரூப் 4

கேள்வி: பட்டப்படிப்பு முடித்துளேன் நான் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா?

பதில்: 10ஆம் வகுப்பு குரூப் 4 தேர்வுக்கு கல்வி தகுதி 10ஆம் வகுப்பு, ஆகவே பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு என எது முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

கேள்வி: எனக்கு இப்போதுதான் 18வயது தொடங்கியுள்ளது நான் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா?

பதில்: குரூப் 4 தேர்வுக்குவிண்ணப்பிக்க 18வயது தொடங்கினால் மட்டும் போதாது 18 வயது முடிந்திருக்க வேண்டும்.

கேள்வி: குரூப் 4 தேர்வு வினாத்தாள்கள் தமிழில் இருக்குமா? ஆங்கிலத்தில் இருக்குமா?

பதில்: வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இருக்கும்.

கேள்வி: ஒருவர் எத்தனை முறை குரூப் 4 தேர்வை எழுதலாம்?

பதில்: எத்தனை முறை வேண்டுமானலும் குரூப் 4 தேர்வை எழுதலாம், குரூப் 4 தேர்வுக்கான அடிப்படை தகுதியை பூர்த்திசெய்தால்.

கேள்வி: குரூப் 4 தேர்வு Result எப்போது வெளியிடப்படும்?

பதில்: குரூப் 4 தேர்வு முடிவானது ஜனவரி -2023 இல் வெளியிடப்படும் என TNPSC தரப்பு அறிவித்துள்ளது.

கேள்வி: அடுத்த குரூப் 4 தேர்வு எப்போது நடத்தப்படும்?

பதில்: 2023ஆம் ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணையில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் 2023-இல் வெளியிடப்பட்டு பிப்ரவரி 2024 தேர்வு நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சில பயனுள்ள பக்கங்கள்

மாதிரி வினாத்தாள்கள் முழு விவரம்
முந்தைய ஆண்டு வினாக்கள் முழு விவரம்
பாடக்குறிப்புகள் முழு விவரம்
கட்-ஆப் மதிப்பெண்கள் முழு விவரம்
Gr-4 சம்பள விகிதம் முழு விவரம்

Last Updated: 7th January 2023

44 thoughts on “TNPSC குரூப் 4 தேர்வு 2023 | பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள்கள்”

  1. ஐயா, என் வயது 46,நான் +2 முடித்து கல்லூரியில் முழுவதும் முடிக்காமல் இடையில் நின்றுவிட்டேன். எனக்கு எந்த தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது

    Reply
      • ஐயா நான் 10ஆம் வகுப்பு படித்துள்ளேன். எனக்கு 24 வயது முடிய உள்ளது நான் தேர்வு எழுதலாமா.? அப்படி எழுதலாம் என்றால் நான் எந்த எந்த புத்தகங்களை படிக்கவேண்டும்.?

        Reply
        • நீங்கள் தேர்வு எழுதலாம்… பள்ளி புத்தகங்களை படியுங்கள்…

      • நான் 10+degree B.A முடித்துள்ளேன் 12th பன்னல 42age No age limit எனக்கு இருக்குமா குருப் 4க்கு

        Reply
  2. Mam my date of birth 16.04.1986 group 4 Can I write the exam … I have not written any exam, my caste PC
    Tell us a little bit about how the Group 4 exam starts and how it attends MAM

    Reply
  3. ஐயா நான் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டேன் எனக்கு மார்ச் மாதம் வந்தால் 18 வயது நிரைவடைகிறது நான் குரூப்4 எலுதலாமா ஐயா 🙏

    Reply
  4. Sir na 12 mudithu vittan yan appavinal ennai Mairkondu padikka vaikka mudiya villai ennaku age 21aakudhu sir (VAO)exam attan pannalama sir

    Reply
  5. Sir, my age is 44yrs,kindly let me know the eligibility to apply TNPSC exam, my qualification M. Com, English & Tamil Higher grade, Shorthand Lower Grade(English).Community :BC.

    Reply
  6. மனைவியோடு வாழும் ஒருத்தர திருமணம் செய்ய கூடாதுனு அறிவிப்பு வந்துருக்கு. அப்பும் 1st wife death agitanga. 2nd marg pannavanga apply pannalama .

    Reply
      • ஐயா நான் ஏழாம் வகுப்பு முடித்துவிட்டு எட்டாம் வகுப்பு இடையில் நின்று விட்டேன் நான் ஏதாவது அரசு வேலைக்கு எக்ஸாம் எழுத முடியுமா
        எனக்கு கொஞ்சம் விவரிக்கும் ஆறு கேட்டுக்கொள்கிறேன்

        Reply
        • TNPSC-ஐ பொறுத்தவரை 10ஆம் வகுப்பாவது முடித்திருந்தால் தான் தேர்வு எழுத முடியும்…

  7. மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் கீரிப்பட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறேன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன் எனது வயது 45 வரும் மார்ச் மாதம் 19/3/2022 ல் 46 தொடங்குகிறது.குருப் 4 தேர்வு எழுத முடியுமா என்பதை பணிவோடு கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏

    Reply
    • உங்கள் வயதிற்கு, பத்தாம் வகுப்பு மட்டும் படித்திருந்தால் விண்ணப்பிக்க முடியாது. 12ஆம் வகுப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்பை தனித்தேர்வாக எழுதி வரும்காலங்களில் குருப் 4 தேர்வு எழுத முயற்சிக்கலாம்… வாழ்த்துக்கள் அண்ணா…

      Reply
  8. Sir, my age is 44yrs,kindly let me know the eligibility to apply TNPSC exam, my qualification B.Lit., B.Ed.,, English Lower & .Community :Sc

    Reply
    • குரூப் 4, குரூப் 2 என அனைத்து தேர்வும் எழுதலாம்

      Reply
  9. ஐயா,எனக்கு வயது 35 நான் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் குரூப்தேர்வு எழுதலாமா?

    Reply
    • எழுத முடியும்… உங்களது பயிற்சியை தொடருங்கள்… வாழ்த்துக்கள்

      Reply
  10. ஐயா நான் பொது பிரிவை சேர்ந்தவன். என்‌ பிறந்த தேதி 05.05.1990. என்னால் குரூப் 4 எழுத முடியுமா?

    Reply
  11. ஐயா நான் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ படித்துவிட்டேன் வயது 36. தேர்வு எழுதமுடியுமா

    Reply
  12. நான் 12 ஆம் முடித்துள்ளேன். எனக்கு வயது 53 ஆகிறது நான் குரூப் 4 – ல் வி.ஏ.ஓ அல்லது நில அளவா் தோ்வு எழுதலாமா?

    Reply
    • வி.ஏ.ஓ அல்லது நில அளவா் இரண்டு தேர்வும் எழுத முடியாது. VAO தேர்வுக்கு அதிகபட்ச வயது 42. நில அளவா் பதவிக்கு கல்வித்தகுதி 10ஆம் வகுப்பிலிருந்து டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் என மாற்றப்பட்டுள்ளது.

      உங்களால் குரூப்-4 தேர்வின் மற்ற பதவிகளான “இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர்” போன்றவைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்…

      Reply
  13. ஐயா நான் mbc பெண் 136 கேள்வி விடை சரியாக எழுதி உள்ளேன் . எனக்கு வேலை கிடைக்குமா (வயது 30)

    Reply
    • இந்த முறை வாய்ப்பு மிக குறைவே. 136 கேள்வி விடை சரி என்பது நல்ல முயற்சியே… விடாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்…

      Reply
  14. சார்.. காது கேட்காத மாற்று திறனாளி க்கு குருப் 4 ல் கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு
    இருக்கும் …2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் காது கேட்காத மாற்று திறனாளி க்கு எத்தனை காலியிடங்கள் உள்ளன…

    Reply

Leave a Comment