TNPSC Group 4 Exam Issues 2020 | Is it True or Not?

TNPSC Group 4 Scam




Updated On 5th January 2020

The last two days one pdf has been much sharing about TNPSC Group 4 Exam Scam. The reason for this issue more than 50 candidates secured the first 50 places in the top 100 places.

TNPSC group 4 Scam 2020




நேற்று முதல் குருப் – 4 தேர்வில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் போன்ற தகவல்கள் முகநூல் மற்றுள் வாட்ஸ்ஆப்-இல் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது, அதற்கு காரணம் கீழ் காணும் இந்த புகைப்படம்,

TNPSC Group 4 Issues 2020

ஒரு வேலை இது தவறான தகவல் என நினைத்து அனைத்து பதிவு எண்களையும் சோதனை செய்தால் உண்மை நிலவரம் தெரிய வரும்.

Reason for the group 4 Scam Rumors

இரண்டு தேர்வு மையங்களில் (ராமேஸ்வரம் , கீழக்கரை) இருந்து தமிழ்நாட்டில் முதல் நூறு நபர்களில் பெரும்பாலானோர் இடம் பெற்றுள்ளனர், இது வரை TNPSC வரலாற்றில் இது போன்று நடைபெற்றது கிடையாது.

ராமேஸ்வரம் மாவட்டம் குரூப்4 தேர்வில் OMR sheet அனுப்பவில்லை என்று ஏற்கனவே செய்தி வந்திருந்தது Full News. இதனால் முறைகேடு நடந்து இருக்குமோ என்று நம்ப தான் தோன்றிகிறது..

தற்செயலாக அப்படி உண்மையாக படித்து முதல் நூறு ரேங்க் வாங்கியவர்கள் ஒரே தேர்வு மையத்தில் எழுதுதியிருந்தால் TNPSC தயவு செய்து ஆதாரத்துடன் விளக்க வேண்டும்.

இந்த குரூப்-4 தேர்வில் ஐந்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் வேலைக்கு செல்ல உள்ளனர், அவர்களின் உழைப்பு சிலர் தவறான வழியில் முறைகேட்டில் ஈடுபட்டது உண்மையானால் கேள்விக்குறியாகிவிடும்,

லட்சகணக்கான மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் குருப்-4 தேர்வையே நம்பி உள்ளனர்,

அதற்கு காரணம் குருப்-1, குருப் 2 மெயின் தேர்வில் அவர்களால் லட்சங்களை செலவு செய்து பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது.

இந்த முறைகேடு உண்மை என்றால் இனி கிராமப்புற மாணவர்கள் போட்டிதேர்வுக்கு படிக்கும் எண்ணத்திற்கு முற்றுபுள்ளி வைத்து விடும்.

குருப்-4 இந்த நிலைமை என்றால் அப்போது குருப்-2 மற்றும் குருப்-1 போன்ற தேர்வுகளில் என்ன சொல்வது.

தயவு செய்து குழப்பங்களை தவிர்க்க TNPSC இதனை தாமாக முன்வந்து விளக்க வேண்டும்,

அந்த பட்டியலில் தங்கள் நண்பர்கள் யாரவது இருந்தால் அவர் எங்கே பயிற்சி மேற்கொண்டார் என்பதை நண்பர்கள் கூறுங்கள். ஆதராம் தெளிவாக இருந்தால் மட்டுமே நாம் எதனையும் உறுதி செய்ய முடியும்.

Related Links

Leave a Comment