C. Rajagopalachari – ராஜாஜி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

ராஜாஜி – Rajaji

We have compiled important details about the freedom fighter C. Rajaji/C. Rajagopalachari, especially for TNPSC Group Exam candidates.

TNPSC General Studies Notes - Rajaji

பெயர் சி.ராஜகோபாலாச்சாரி / ராஜாஜி
காலம் 1878 டிசம்பர்‌ 1௦ –
பிறப்பு சேலம்‌ – தொடரப்பள்ளி
பெற்றோர் வெங்கடார்யா – சிங்காரம்மா
படிப்பு சட்டம்‌
பணி வழக்கறிஞர்‌, எழுத்தாளர்‌, அரசியல்வாதி
சிறப்பு பெயர்‌ சேலத்து மாம்பழம்‌, அரசியல்‌ சாணக்கியர்
நடத்திய பத்திரிகை  இளம் இந்தியா
பாரத ரத்னா விருது  1954-ல் வழங்கப்பட்டது

ராஜாஜியின்‌ அரசியல்‌ பயணம்‌ 

  • 1917-1921 வரை சேலம்‌ நகர சபை தலைவராக பணியாற்றிவர்‌.
  • 1921- ல்‌ தீவிர அரசியலில்‌ ஈடுபட்டார்‌.
  • 1920-1922 வரை ஒத்துழையாமை இயக்கத்தில்‌ பங்கேற்றார்‌.
  • 1925-ல்‌ திருச்செங்கோட்டில்‌ காந்தி ஆசிரமம்‌ அமைத்து மதுவிலக்கு பிரச்சாரம்‌ செய்தார்‌.
  •  1930-ல்‌ தமிழ்நாட்டில்‌ உப்பு சத்தியாகிரகத்திற்கு தலைமை ஏற்று திருச்சி – வேதாரண்யம்‌ வரை 100 பேருடன்‌ நடந்து சென்றார்‌.
  • 1937-ல்‌ காங்கிரஸ்‌ சார்பாக சென்னை மாகாண தேர்தலில்‌ வற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார்‌.
  • 1937-1939 வரை மட்டுமே முதலமைச்சராக இருந்து பதவியை ராஜினாமா செய்தார்‌.

1937 – 1939 ஆட்சியில் ராஜாஜியின்‌ செயல்திட்டங்கள் 

  • மதுவிலக்கு சட்டம்‌
  • கைத்தொழில்‌ பாதுகாப்பு சட்டம்‌
  • ஆலய பிரவேச சட்டம்‌
  • விற்பனை வரி அறிமுகம்‌
  • ஆரம்ப பள்ளியில்‌ ஹிந்தி கட்டாயம்‌
  • 1942-ல்‌ காங்கிரஸில்‌ இருந்து விலகினார்‌.
  • 1944- ல்‌ மீண்டும்‌ காங்கிரஸில்‌ இணைந்தார்‌.
  • 1944- ல்‌ பாகிஸ்தான்‌ பிரிக்கும்‌ முறையை சி.ஆ.திட்டம்‌ ௭ன்ற பெயரில்‌ தயாரித்து காந்தியிடம்‌ கொடுத்தார்‌.
  • 1946-1947 வரை மேற்கு வங்க ஆளுநராகபணியாற்றினார்‌.
  • 1948-1950 வரை இந்தியாவின்‌ கவர்னர்‌ ஜெனெரலாக பதவி வகித்தார்‌.
  • 1952-ல்‌ தமிழக மேலவை உறுப்பினர்‌ என்ற தகுதியுடன்‌, 1952 ஏப்ரல்‌ 10 ல்‌ தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார்‌.
  • 1954- ல்‌ முதல்வர்‌ பதவியை ராஜினாமா செய்தார்‌.

ராஜாஜி எழுதிய நூல்கள் 

  • சக்கரவர்த்தி  திருமகன்‌ (ராமாயண மொழிபெயர்ப்பு)
  • வியாசர்‌ விருந்து (மகாபாரத மொழிபெயர்ப்பு)
  • திக்கற்ற பார்வதி
  • கண்ணன்‌ காட்டிய வழி

Leave a Comment