ஆண்டாள் – Aandal
Group 4 Exams – Details
காலம் | 7ஆம் நூற்றாண்டு |
நூல்கள் | நாச்சியார் திருமொழி, திருப்பாவை |
பாடல்களின் எண்ணிக்கை | நாச்சியார் திருமொழி – 143 திருப்பாவை – 30 |
சிறப்பு பெயர் | சூடிக் கொடுத்த சுடர்க்கொடி |
சமயம் | வைணவம் |
- திருமாலை வழிபட்டு சிறப்புநிலை எய்திய பன்னிரு ஆழ்வார்களின் ஒருவராவர்.
- ஆண்டாள் மட்டுமே பெண் ஆழ்வார் ஆவார்.
- இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப் பெற்றார்.
- நந்தவனத்தில் திருத்துழாய்ச் செடிகளிடையே கிடந்து பெரியாழ்வாரால் எடுத்து வளர்க்கப்பட்ட தெய்வக் குழந்தை இவள்.
- கண்ணனையே மணாளனாகக் காதலித்த இவ்வணங்கு அன்பின் திருவுருவானவள்.
- இவர் பூஞ்சோலையிலுள்ள மலர்களிலெல்லாம் திருமாலைக் கண்டாள். அவற்றைக் “கோவை மணாட்டி” “முல்லை பிராட்டி” என்று செல்லப் பெயரிட்டு அழைத்தாள்.
- இவள் பாடியவை நாச்சியார் திருமொழியும் (143 பாடல்கள்) திருப்பாவையும் (30 பாடல்கள்).
- வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று என்ற திருப்பாவை அடியை வைத்து கணக்கிடும் ஆய்வாளர்கள் ஆண்டாள் காலம் கி.பி. 885 என்று கூறுகின்றனர்.
“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் எரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான்! பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்! |
“மானிடவர்க் கென்று பேச்சுபடில் வழகில்லேன்” என்று உறுதி பூண்ட ஆண்டாள் தன் திருமணக் கனவலை உரைக்கும் திறம் அழகானது மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத |
- அகத்துறையாய் அமைந்த பக்திப் பாடல்கள் மிகுதியாக உள. ஆனால் ஆண்டாள் தான் ஒரு பெண்ணாகப் பிறந்து, இயல்பான அனுபவ உணர்வோடு, மெய்ப்பாடு தோன்றப்பாடும் அழகு தனிச்சிறப்பாக இருக்கிறது.
- திருமால் கையிலுள்ள வெண்சங்கைப் பார்த்து, அத தன்னைவிட வாய்ப்புடையத என்பதை உணர்த்தி அவர் கேட்கும் கேள்விகள் பேதைப் பெண்ணின் கால் உள்ளத்தை வெளிப்படுத்துகின்றன.
“கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ! திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ? மருப்பொசித்த மாதவன்தன், வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி வெண்சங்கே! |