ஆதவன் – Aathavan
Group 4 Exams – Details
கவிஞர் | ஆதவன் |
இயற்பெயர் | கே.எஸ்.சுந்தரம் |
பிறப்பு | திருநெல்வேலி – கல்லிடைக்குறிச்சி |
காலம் | 1942 – 1987 |
விருது பெற்ற நூல் | முதலில் வரும் இரவு – சாகித்திய அகாதெமி விருது 1987 |
- ஆதவனின் இயற்பெயர் “கே.எஸ்.சுந்தரம்”
- இவரது காலம் 1942 – 1987
- திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர்.
- தமிழக எழுத்தாளரான இவர் அறுபதுகளில் எழுதத் தொடங்கி தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்.
- இவர் இந்திய இரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றி பிறகு தில்லியில் உள்ள “நேஷனல் புக் டிரஸ்டின்ஸ தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியார்.
- பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987 சூலை 19-ம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழியில் சிக்கி மரணமடைந்தார்.
- இவருக்கு “முதலில் இரவு வரும்” என்ற சிறுகதைக்காக மரணத்திற்கு பின் 1987-ம் ஆண்டிற்கான :சாகித்திய அகாதெமி விருது” வழங்கப்பட்டது.
சிறுகதைத் தொகுப்புகள்
- கனவுக்குமிழ்கள் (1975)
- கால்வலி (1975)
- ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் (1980)
- புதுமைபித்தனின் துரோகம் (1981)
- முதலில் இரவு வரும் (1985)
Related Links
Group 4 Model Questions – Download