Agaramuthali, Devaneya Pavanar, Pavalareru – அகரமுதலி, தேவநேயப் பாவாணர், பாவலரேறு பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

அகரமுதலி, தேவநேயப் பாவாணர், பாவலரேறு – Agaramuthali. Devaneya Pavanar, Pavalareru

TNPSC Tamil Notes - Agaramuthali, Devaneya Pavanar, Pavalareru - அகரமுதலி, தேவநேயப் பாவாணர், பாவலரேறு

Group 4 Exams – Details

அகரமுதலி வரலாறு

அகரம் ஆதி என்னும் இருசொற்களின் சேர்க்கையே “அகராதி” என்றானது. “அகராதி” என்னும் சொல் தற்போதைய வழக்கில் “அகர முதலி” என வழங்கப்படுகிறது.

வரலாறு

தமிடழ் அகரமுதலி வரலாற்றில் செம்பாதி இடத்தை பெரும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாகும். இதில் பழமையானது சேந்தன் திவாரகம். இதன்  ஆசிரியர் திவாகர் 25 நிகண்டுகளில் சிறந்தது மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.

அகரமுதலி

திருமூலர் எழுதிய “திருமந்திரத்தில்” “அகராதி” என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ளது. அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த நூல் அராதி நிகண்டு.

சதுரகராதி

  • தமிழில் தோன்றிய முதல் அகராதி “சதுரகராதி” இதனைத் தொகுத்தவர் வீரமாமுனிவர். இது 1732-ம் ஆண்டு வெளிவந்தது. சதுர் – நான்கு என்பது பொருள். (பெயர் பொருள், தொகை, தொடை என நான்கு).

வீரமாமுனிவர் இயற்றியது

  • தமிழ் – இலத்தீன் அகராதி
  • இலத்தீன் – தமிழ் அகராதி
  • தமிழ் – பிரெஞ்சு அகராதி
  • பிரெஞ்சு – தமிழ் அகராதி
  • போர்த்துகீசியம் – இலத்தீன் தமிழ் அகராதி

பிற அகர முதலிகள்

  • TM    தமிழ் – தமிழ் அகராதி – லெவி-ஸ்-பால்டிஸ்
  • TM    தமிழ்ச்சொல்லகராதி – யாழ்பாணம் கதிர்வேல்
  • TM    இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி – இராமநாதன் (இது படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலி
  • TM    தமிழ் – ஆங்கிலப் பேரகராதி – வின்சுலோ
  • TM    தமிழ் – தமிழ் அகரமுதலி – மு. சண்முகம் (இது 1985 ஆம் ஆண்டு (தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
  • TM    1985-ம் ஆண்டு தேவநேயப்பாவாணரின் “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேகரமுதலியின்” முதல் தொகுதி வெளிவந்தது. இதன் 2-ம் தொகுதி 1993 ஆம் ஆண்டு வெளியானது. இது படங்களைத் தந்த இரண்டாவது அகரமுதலி ஆகும்.
  • TM    “அபிதான கோசம்” தமிழ்க் கலைக் களஞ்சியங்களின் முன்னோடி ஆகும். இது 1902-ல் வெளியானது.
  • TM    சிங்காரவேலனார் தொகுத்து வெளியிட்ட “அபிதான சிந்தாமணி” இலக்கியச் சொற்களோடு அறிவியல் துறைப் பொருள்களையும், முதன்முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து 1934-ல் வெளியிட்டது.
  • TM    1925-ம் ஆண்டு பாவனந்தரின் தற்காலத் தமிழ்ச் சொல்லகராதியும் 1937-ம் ஆண்டு மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்” வெளிவந்தது

தமிழ்வளர்ச்சிக் கழகம்

  • முதல் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்து “தமிழ்வளர்ச்சிக்கழகம்” வெளியிட்டது. (பத்துத் தொகுதிகள்) இக்கழகம் குழந்தைகள் கலைக்களஞ்சியம், நாகக் கலைக்களஞ்சியம், இசுலாமியக் கலைக்களஞ்சியம் முதலிய பல கலைக் களஞ்சியங்களையும் வெளியிட்டுள்ளது.

தமிழ் நூல்கள்

  • “மணவை முஸ்தபா” அறிவியல் சார்ந்த துறைவாரியான “கலைச்சொல் அகரமுதலிகளைத்” தொகுத்து கலைச்சொல் அகர முதலிகள்” 1960-ம் ஆண்டு தொகுக்கப்பட்டன. அறிவியல் கலைச் சொல் களஞ்சியம் 1991-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

மாெழி ஞாயிறு – தேவநாயப் பாவாணர்

  • மாெழி ஞாயிறு என்று அழைக்கப்படுவர் தேவநாயப் பாவாணர் ஆவார்.
  • இவரது காலம் 07.02.1902 – 15.01.1981.
  • இவர் பிறந்த ஊர் சங்கரன்கோவில்.
  • பெற்றோர் ஞானமுத்து – பரிபூரணம் ஆவர்.
  • உலகின் முதன் மொழி தமிழ் மொழி. இந்திய மொழிகளுக்கு மூலரும் வேரும் தமிழ்மொழி. திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் என்று வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்து நிருவிய செம்மல் தேவநாயப் பாவாணர். தமிழ், தமிழர் நலம் காப்பதையே உயிர் மூச்சாக கொண்டவர்.
தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர் கால்டுவெல்
தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர்
தமிழைத் தழைக்கச் செய்த செம்மல் மறைமலையடிகள்
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் தேவநேயப்பாவாணர்
  • உலகின் முதல் மாந்தன் தமிழன். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே என்பதும் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் பழந்தமிழர் நாகரிகம் என்பதும் பாவாணரது  ஆய்வுப்புலத்தின் இரு கண்களாகும். இவர் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்டார்.
  • மதுரையில் 05.01.1981 அன்று நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது, “மாந்தன் தோற்றமும்; தமிழர் மரபும்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தார். அதுவே அவரது பணியாகவும் இருந்தது.

பாவாணரின் நூல்கள்

  • தமிழ் வரலாறு, முதல் தாய்மொழி, தமிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் திருமணம், வடமொழி வரலாறு, தமிழர் மதம், மண்ணிலே விண், பண்டைத்தமிழர் நாகரிகமும் பண்பாடும், உயர்தரக் கட்டுரை இலக்கணம், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், திருக்குறள் மரபுரை முதலான 43 நூல்களை படைத்தார். மேலும் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.
  • தேவநேயப்பாவாணருக்கு தனித்தமிழ் ஊற்று, செந்தமிழ் ஞாயிறு, இலக்கியப் பெட்டகம், இலக்கணச் செம்மல், தமிழ் மானங்காத்தவர் என்ற புகழ் மிக்க பெயர்களும் உண்டு. தமிழை வட மொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று பாவாணார் கூறுவார்.
  • 1985-ம் ஆண்டு தேவநேயப்பாவாணரின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் முதல் தொகுதி வெளிவந்தது. இரண்டாம் தொகுதி 1993-ம் ஆண்டு வெளிவந்தது. ஒவ்வொரு சொல்லின் சொற்பிறப்பும் இனமொழிச் சொற்களுக்கான குறிப்பும், பதிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளன. படங்களைத் தந்த இரண்டாவது அகர முதலி இதுவே ஆகும்.

பாவலரேறு

  • பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை. மாணிக்கம்.
  • இவர் பிறந்த ஊர் சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்.
  • பெற்றோர் துரைசாமி- குஞ்சம்மாள் ஆவர்.
  • இவரது காலம் 10.03.1933 – 11.06.1965
  • தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை உலகம் முழுவதும் பரப்பியவர்.
  • உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, கனிச்சாறு, பள்ளிப்பறைவைகள் என்பன பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் ஆகும்.
  • இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது.
  • இவரது நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டுள்ளன.

தழிழ் படித்தால் (பெருஞ்சித்திரனாரின் கூற்று)

  • அறம் பெருகும் தமிழ்படித்தால், அகத்தில் ஒளி பெருகும்.
  • திறம் பெருகும் உரம் பெருகும்.
  • தீமைக்கெதிர் நிற்கும், அற்பெருகம் ஆண்மை வரும்.
  • மருள் விலகிப்போகும், புறம் பெயரும் பொய்மை யெலாம், புதுமை பெறம் வாழ்வே”
  • வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர் மொழி”

ஐங்குறுநாறு

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

1 thought on “Agaramuthali, Devaneya Pavanar, Pavalareru – அகரமுதலி, தேவநேயப் பாவாணர், பாவலரேறு பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்”

Leave a Comment