Ainkurunuru – ஐங்குறுநூறு பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

ஐங்குறுநூறு

TNPSC Tamil Notes - Ainkurunuru - ஐங்குறுநூறு

நூற்குறிப்பு

ஐங்குறுநூறு ஐந்து + குறுமை + நூறு
ஆசிரியர் எண்ணிக்கை 5
பாடல் எண்ணிக்கை 500
எல்லை 3-6
பொருள் அகம்
தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்
தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
தெய்வம் சிவன்
  • மூன்றடிச்சிறுமையும், ஆறடிப் பெருமையும் கொண்ட அகவற்பாக்களால் தொகுக்கப்பெற்ற அகப்பொருள் நூலாகும்.
  • திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக ஐந்த திணைக்கு ஐந்நூறு பாடல்கள் உள்ளளன. அவற்றுள்
திணைப்பாடல்கள் ஆசிரியர்கள்
குறிஞ்சி கபிலர்
முல்லை பேயனார்
மருதம் ஒரம் போகியார்
நெய்தல் அம்மூவனார்
பாலை ஓதலாந்தையார்

இச்செய்தியை

“மருதமே ரம்போகி நெய்த லம்மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன் – கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு”

என்னும் பாடல் உணர்த்துகின்றது.

  • இந்திர விழா குறித்து இந்நூல் கூறுகிறது.

மேற்கொள்கள்

  • “நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க”
  • “பால்பல ஊறுக பகருபல சிறக்க”
  • “பகைவர்புர் ஆர்க பார்ப்பார் ஒதுக”
  • “பசியில் லாகுக பிணிசேண் நீங்குக”
  • “வேந்துபைக தணிக யாண்டுபல நந்துக”

எனப் புலவர் ஓரம்போகியார் “வேட்கைப்பத்து” என்னும் தலைப்பிலுள்ள பத்துப்பாடல்களில் சிறந்த உலகியல் கருத்துகளை அமைத்துப் பாடியுள்ளார்.

  • நாணிலை மன்ற பாண நீயே

கோணேர் இலங்குவளை நெகிழ்த்த

கானலந் துறைவற்குச் சொல்லுகுப் போயே

இவ்வாற செறிவுமிக்க சிறிய பாடல்களடங்கிய இந்நூலுக்கு ஒளவை ச.துரை சாமிப்பிள்ளை உரையெழுதியுள்ளார்

  • “பச்சூன் பெய்த பைந்நிண வல்சி

பொலம்புனை கலந்திற் றகுகுவென் மாதே”  – ஓதலாந்தையார்

குறுந்தொகை

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment