Anantharangar – ஆனந்தரங்கர் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

ஆனந்தரங்கர் – Anantharangar

TNPSC Tamil Notes - Anantharangar - ஆனந்தரங்கர்

Group 4 Exams – Details

  • நாட்குறிப்பு என்பது டைரி
  • டைஸ் என்ற லத்தீன் சொல்லுக்கு நாள் என்பது பொருள்
  • டைஸ் என்பதிலிருந்து தோன்றிய “டைரியம்” என்ற லத்தீன் மொழிச் சொல்லுக்கு “நாட்குறிப்பு” என்பது பொருள்.
  • டைரியம் லத்தீன் சொல் ஆங்கிலத்திற்குச் சென்ற போது “டைரி” என்றானது.
  • ஆனந்தரங்கரம் பிள்ளை “டைரி” என்பதற்கு இணையாகத் “தினப்படி செய்திக் குறிப்பு” “சொஸ்த விகிதம்” என்ற தொடர்களைப் பயன்படுத்தியுள்ளார்.
  • சொஸ்தம் என்றால் தெளிந்த அல்லது உரிமை உடைய என்பது பொருள்.
  • விகிதம் என்பதற்குக் கடிதம் அல்லது ஆவணம் என்பது பொருள்
  • கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம் ஆகியன பழம் வரலாற்றை அறிய உதவும் காலக்கண்ணாடிகள்.
  • நாட்குறிப்பு என்பது அது எழுதப்பட்ட காலத்தின் நிகழ்வுகளைத் தெரிவிக்கும் வரலாற்று ஆவணம்.
  • தனிப்பட்ட ஒருவரின் சொந்த செய்திகள், வரவு செலவு கணக்குகள் எழுதப்பட்ட நாட்குறிப்பு மற்றவருக்கு பயன்படாது.
  • குறிப்பிட்ட நாளில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள், இயற்கைப் பேரிடர், உலகின் சீரிய நிகழ்வுகள் போன்றன பதிவு செய்யப்பட்ட நாட்குறிப்புகள் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப்படுகின்றன.
  • கல்வெட்டுகளும் செப்பேடுகளும், இலக்கியங்களும் பழங்கால வரலாற்றை அறிய உதவும் காலக்கண்ணாடி. ஆனால் ஓரு நாட்குறிப்பானது அக்கால நிகழ்வுகளை நமக்கு தெளிவாக எடுத்துரைக்கும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது. அதுதான் ஆனந்தரங்கனின் நாட்குறிப்பு
  • நிகழ்ந்த மிகச்சிறந்த நிகழ்வுகளின் பதிவாக அமைந்தனால் தான் ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஒர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெறுகிறது.
  • ஆனந்தரங்கர் சென்னை பெரப்பூரில் 1709-ம் ஆண்டு மார்ச் திங்கள் 30-ம் நாள் பிறந்தார்.
  • ஆனந்தரங்கர கல்வி கற்றபின்னர் பாக்கு கிடங்கு நடத்தி வந்தார். அச்சமயம் அரசுப்பணிகள் சிலவற்றில் தந்தைக்கு உறுதுணையாக இருந்து வந்தார். துய்ப்ளெக்சு என்னும் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர் (துபாசி) இறந்ததனா், பன்மொழியறிவு பெற்ற ஆனந்தரங்கர் அப்பணிக்கு நியமிக்கப்பட்டார்.

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

  • ஆனந்தரங்கர் துபாசியாகப் பணியாற்றிய காலத்தில் 1736 ஆம் ஆண்டு முதல் 1761 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். தம் நாட்குறிப்புக்குத் தினப்படி செய்திக்குறிப்பு. சொஸ்த லிகிதம் என்று பெயரிட்டார்.
  • பிரெஞ்சுக்காரர்களுக்கும், இந்திய மன்னர்களுக்கும் இடையே பாலமாக இருந்தவர் ஆனந்தரங்கர். முசபர்சங், ஆனந்தரங்கருக்கு 1749 ஆம் ஆண்டில் மூவாயிரம் குதிரைகளை வழங்கி அவருக்கு மன்சுபேதார் என்னும் பட்டத்தையும் வழங்கினார். பின்பு செங்கற்பட்டுக்கு கோட்டைக்குத் தளபதியாகவும், அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாரராகவும் நியமனம் பெற்றார். துபாசி பணியாற்றுவோர் தமிழ் மக்களின் தலைவராக அறிவிக்கபடுவர். எனவே ஆனந்தரங்கர் வணிகராக துபாசியாக இருந்தபோதிலும் மன்னரைப்போல் மதிக்கப் பெற்றார்.
  • டைல் என்னும் இலத்தீன் சொல்லுக்கு நாள் என்பது பொருள். இதிலிருந்து டைரியம் என்னும் இலத்தீன் சொல் உருவானது. இச்சொல்லக்கு நாட்குறிப்பு என்பது பொருள். இதிலிருந்தே டைரி என்னும் ஆங்கிலச்சொல் உருவானது.

மு.வ.கடிதம்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment