அஞ்சலையம்மாள் – Anjalaiammal
பெயர் | அஞ்சலையம்மாள் |
பிறப்பு | 1890 – 1961 |
பெற்றோர் | முத்துமணி – அம்மாகண்ணு |
சிறப்பு பெயர் | தென்னாட்டின் ஜான்சிராணி |
- கடலூர் அஞ்சலையம்மாள் 1890 ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் எளிமையான குடும்பத்தில் பிறந்தார்.
- 1921-ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியபோது இவர் தன் பொதுவாழ்வைத் தொடங்கினார்.
- நீலன் சிலை அகற்றும் பேராட்டம், உப்பு காய்ச்சும் பேராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் அனைத்து பேராட்டங்களிலும் கலந்து கொண்டு பல ஆண்டு சிறையில் வாடினார்.
- மிக சிறந்த பேச்சாளராக விளங்கினார். குடும்ப சொத்துக்களையும் குடியிருந்த வீட்டையும் விற்று விடுதலை போராட்டத்திற்காக செலவு செய்தார். நீலன் சிலை அகற்றும் பேராட்டத்தல் தனது ஒன்பது வயது மகளையும் ஈடுபடுத்தினார். தனது அனல் பறக்கும் பேச்சால் இயக்கத்தின் வளர்ச்சிக்கு உதவினார்.
- ஒரு முறை காந்தியடிகள் சிறையில் இருப்பவர்களை பார்க்க வந்தபோது ஒன்பது வயது அம்மாக்கண்ணு அஞ்சலையம்மாளின் மகள் என்பதையறிந்து மிகவும் மகிழ்வுற்று அச்சிறுமியை தன்னுடன் லதர்வாவில் உள்ள ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று லீலாவதி என்று பெயரிட்டு படிக்கவும் வைத்தார்.
- ஒருமுறை கடலூருக்கு காந்தியடிகள் வந்தபோது அவரைச் சந்திப்பதற்கு தடை விதித்திருந்தனர். அஞ்சலையம்மாள் பர்தா வேடம் அணிந்து குதிரை வண்டியில் காந்தியடிகளை ஏற்றிச் சென்றார். அதனால் காந்தியடிகள் அஞ்சலையம்மாளைத் “தென்னாட்டின் ஜான்சிராணி” என்றழைத்தார். இவர் இருந்த சிறைகள் கடலூர், திருச்சி, வேலூர் மற்றும் பெல்லாரி
Related Links
Group 4 Model Questions – Download