அன்னிபெசணட் அம்மையார் – Annipesant Ammaiyar
பெயர் | அன்னிபெசணட் அம்மையார் |
இயற்பெயர் | அன்னி உட் |
பிறப்பு | லண்டன் |
காலம் | 1847 – 1933 |
- லண்டன் ஐரிஷ் குடும்பத்தில் பிறந்தவர்.
- பெற்றோர் இவருக்கு இட்டபெயர் அன்னி உட். திருமணத்திற்கு பிறகு திருமதி அன்னிபெசண்டு என்று அழைக்கப்பட்டார்.
- 1893-ல் பிரம்மஞான சபைப் பணிக்காக (Theosophical Society) இந்தியா வந்தார்.
- 17.09.1875-ல் எச்.பி. பிளாவட்சி என்ற ரஷிய அம்மையாரும் கர்ணல் எச்.எ. ஆல்காட் என்ற அமெரிக்கரும் சேர்ந்து அமெரிக்காவில் நியூயார்க நகரில் துவக்கிய அமைப்பே பிரம்ம ஞானசபை ஆகும்.
- இருவரும் இந்தியா வந்து சபையின் நோக்கத்தை நிறைவேற்றினார். பிரம்மஞானசபையின் நோக்கங்கள்
- உலக சகோதரத்துவத்தை மையமாகக் கொண்டு செயல்படல்.
- உலக சமயங்கள், தந்துவங்கள், அறிவியல்களை ஒப்பிட்டு ஆய்வது.
- மனிதரிடையே மறைந்து கிடக்கும் இயற்கை நியதிகளை கண்டறிதல்.
- சென்னை அடையாரில் பிரம்மஞான சபையின் தலைமை பீடத்தை அமத்தனர். ஆல்காட் 1907இல் இறந்த பின் 1907 அன்னிபெசண்ட் அம்மையார் அதன் தலைவரானார்.
- 1907 முதல் 1933 வரை பிரம்மஞான சபையின் தலைவராக இருந்தார்.
- சென்னை அடையாறு இவர்தம் பணிக்கு உரிய இடமாகத் திகழ்ந்தது.
- தேசிய இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தார்.
- நியூ இந்தியா என்ற நாளிதழை நடத்தினார்.
- “நியூ இந்தியா இதழைப் பின்பற்றியே தமிழ் இதழ்கள் நடத்த நான் தூண்டப்பட்டேன்” என்று கூறியுள்ளார்.
- காந்தியடிகளுக்கு முன்பு வரை இந்திய அரசியலில் பெருஞ்செல்வாக்கு பெற்றிருந்த தலைவர் அன்னிபெசனட் ஆவார்.
- இவர் ஓம்ரூல் (Home Rule) என்னும் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கினார்.
- திலகருடன் சேர்ந்து பணியாற்றினார்.
- 1917-ல் கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.
- காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்த முதல் பெண்மணி இவரே ஆவார்.
- காந்தியடிகள் அரசியில் தலமையை ஏற்ற பிறகு இவர் சமூகப் பணியில் அதிக கவனம் செலுத்தினார்.
- சாரணர் இயக்கத்தை (Scout Movement) இந்தியாவில் பரப்பினார்.
- கல்வித் தொண்டு செய்தார்.
- இவர் காசியில் தொடங்கி பள்ளிதான் பிற்காலத்தில் காசி இந்து பல்கலைக்கழமாக மாறிற்று.
- இரவீந்திரநாத் தாகூரின் ஆதரவுடன் சென்னையில் தேசிய பல்கலைக் கழகம் ஒன்றைச் சில ஆண்டுகள் நடத்தினார்.
- இந்து சமயத்தின் மீது பெரும் மதிப்பு கொண்டவர். “இந்து சமயம் சிறந்த முறையில் பேணப்படாவிட்டால் இந்தியாவிற்கு எதிர்காலம் கிடையாது என்று சொன்னவர்.
- இந்திய மகளிர் சங்கத்தை நிறுவியர்.
- இளமைத் திருமணத்தைத் எதிர்த்தார். பெண்கள் உரிமைக்கும் பெண்கள் மறுமணத்தையும் ஆதரித்தார்.
- வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் மேம்பாட்டிற்கும் பெண் விடுதலைக்கும் பாடுபட்டவர்.
- பிரம்மஞான சபை இந்து கலாச்சாரத்தையும், சமுதாயச் சீர்திருத்தத்தின் அவசியத்தையும், அனைத்து துறைகளின் முன்னேற்றத்தையும் வலியுறுத்தியதன் விளைவாக இந்திய தேசியம் துளிர்விட்டு வளர வழி வகுத்தது” என்றார் ஆர்.சத்தியநாதையர்.
உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள்
Related Links
Group 4 Model Questions – Download