Avvaiyar – ஒளவையார்  பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

ஒளவையார்

TNPSC Tamil Notes - avvaiyar - ஒளவையார் 

  • அறிவிற் சிறந்த ஒளவை பிராட்டியார் நாடறிந்ததொன்று. பல கதைகள் இவர் குறித்து வழங்குகின்றன.
  • பல்வேறு காலங்களில் பல்வேறு ஒளவையார்கள் வாழ்ந்தார்கள் என்பதை இலக்கிய வாயிலாக அறிகிறோம்.
  • சங்க காலத்தில் காணும் ஒளவையார் வேறு இடைக்காலத்தில் வாழ்ந்த ஒளவையார் வேறு என்று கொள்வதே பொருந்தும்.
  • சிறுவர்களுக்கென்று நல்வழி பாடிய ஒளவையார் நாயன்மார்களையும், நம்மாழ்வாரையும் குறிப்பிடுகின்றார். எனவே அவர்கள் வாழ்நத்த காலத்திற்கும் பிற்பட்ட ஓர் ஒளவையார் வாழந்த்தார் என்ற முடிவுக்கு வருகிறோம்.
  • அவர் பத்தும் பதினோராம் நூற்றாண்டில் வாழந்திருக்கலாம். நல்லிசைப் புலமை மெல்லியராகிய இவரைச் சோழ நாட்டில் பாணர்குடியில் பிறந்தவர் என்று குறிப்பர்.
  • தமிழ் நாவலர் சரிதையும் இவர் குறித்துப் பல்வேறு நிகழ்ச்சிகளைக் கூறுகின்றது.

ஒளவையார் பாடிய நூல்கள்

ஆத்திச்சூடி என்னும் நூலை இளைஞர்கள் எளிதில் கற்று மனதில் இருத்தும் வண்ணம் எளிய முறையில் சிறு சிறு சொற்றொடர்கள் கொண்டு அமைத்துள்ளார்.

காப்புச் செய்யுளைத் தவிர்த்து 109 பாக்கள் உள்ள இந்நூலில் கடவுள் வாழ்த்தில் “ஆத்திச்சூடி” என்னும் முதற்குறிப்பு உள்ளது. எனவே, நூலின் பெயரும் அதுவாக அமைந்துள்ளது.

ஆத்திச்சூடியை நோக்கச் சிறிது நீண்ட சொற்றொடரால் ஆன நூல் கொன்றை வேந்தன் ஆகும்.

படிப்படியாக மனவளர்ச்சி பெற்று மாணவர்கள் கற்கும் முறையில் இந்நூல் அமைந்திருப்பது , ஆசிரியர் மற்றவர் உள்ளம் உணரும் பான்மையினைப் புலப்படுத்தும்.

மூதுரை என்னும் நூலுக்கு வாக்குண்டாம் என்ற பெயரும் உண்டு. வாக்குண்டாம் என்றே கடவுள் வணக்கப்பாடல் தொடங்குவதால் இப்பெயர் ஏற்பட்டது.

இதில் காணும் செய்யுட்கள் எளிமையும், இனிமையும் உடையன. நூலின் முப்பது செய்யுட்களிலும் பழைய இலக்கியங்களில் காணும் அரிய கருத்தகளையும் நிதிகளையும் காணலாம்.

மக்கள் தம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நல்ல வழிகளைக் கூறும் நல்வழி எனும் நூலையும் இவர் இயற்றியுள்ளார்.

சமயக்கருத்துக்களும், தத்துவக் கருத்தக்களும் நிறைந்த நூல் இது.

சிவபெருமானின் ஐந்தெழுத்தும், திருநீரும் இந்நூலில் சிறப்பிக்கப் பெற்றிருப்பதால் ஈசனிடம் இடையறாத அன்பு பூண்டவர் ஒளவையார் என்பது புலனாகிறது

இந்நூலில்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூதுமணியே நீ யெனக்குச்

சங்கத் தமிழ்மூன்றுந் தா

என்ற விநாயகப் பெருமானின் துதி கடவுள் வாழ்த்து செய்யுளாக அமைந்துள்ளது.

இச்செய்யுள் தவிர மேலும் நாற்பது செய்யுட்கள் இந்தநூலில் உள்ளன. இவை தவிர இவர் விநாயகரகவல், ஞானக்குறள், அசதிக்கோவை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

ஒளவையின் வாக்கு அமுதமாகும் என்ற சொல்லுக்கு விளக்கமாய் இவருடைய நூல்கள் எல்லாம் விளக்குகின்றன.

  • ஒளவை சங்கப் புலவர் ஆவார். அதியமானின் நண்பர். இவர் அரிய நெல்லிக்கனியை இவரிடமிருந்து பெற்றவர்.
  • சங்க காலத்தில் பெண் கவிஞரில் அதிக பாடல்கள் பாடியவர் இவரே.
  • சங்க காலத்தில்  பாடிய ஒளவையும் ஆத்திச்சூடிய பாடிய ஒளவையும் வேறு வேறானவர்.
  • ஒளவை – தாய் என்ற பொருள்
  • அருந்தமிழ்ச்செல்வி – ஒளவை
  • “இவ்வே பீலி அணிந்து ……” பாடல் ஒளவை “அதியமானுக்கும், தொண்டைமானுக்கும் இடையே போரை நிறுத்த எண்ணி” தொண்டைமானிடம் பாடியது.
  • அணுவைத் துளைத்து….. ல் கடலை உட்புகுத்திக் குறுகத் தறித்த குறள்” – பிற்கால ஒளவையார்

ஏலாதி

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

1 thought on “Avvaiyar – ஒளவையார்  பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்”

Leave a Comment