Bharathiyar – பாரதியார் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

பாரதியார் – Bharathiyar

TNPSC Tamil Notes - Bharathiyar - பாரதியார்

Group 4 Exams – Details

புலவர் பாரதியார்
பெற்றோர் சின்னசாமி – இலக்குமி அம்மையார்
பிறப்பு தூத்துக்குடி மாவட்டம் – எட்டயபுரம்
காலம் 11.12.1882 –  11.09.1921
நூல்கள் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, இசையின் பெருமை
சிறப்புப் பெயர்கள் மகாகவி, தேசியக்கவி, விடுதலைக்கவி

ஆசிரியர் குறிப்பு

  • சுப்பிரமணிய பாரதியார் தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில பிறந்தார். இவரது காலம் 11.12.1882 –  11.09.1921
  • இவரின் பெற்றோர் சின்னசாமி – இலக்குமி அம்மையார்  துணைவியார் செல்லம்மாள்
  • சிறந்த படைப்பாளரான இவர் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, இசையின் பெருமை முதலிய நூல்களை படைத்துள்ளார்.  ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார்.
  • சிறப்புப் பெயர்கள் : மகாகவி, தேசியக்கவி, விடுதலைக்கவி
  • புதுக்கவிதையின்முன்னோடி, பாட்டுக்கொரு தலைவன், தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
  • சிந்துக்குக் தந்தை, செந்தமிழ்தேனீ, புதிய அறம்பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன், நீ துயில் நீக்கப் பாடி வந்த நிலா என பாரதிதாசனால் பாராட்டப்பெற்றவர்.
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி என கவிமணி பாராட்டினார்
  • சுதேச மித்திரன், இந்தியா, சக்கரவரித்தினி, விஜயா முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்துள்ளார். கர்மயேகாகி, பாலபாரத், சூர்மயோதயம் போன்ற வேற பத்திரிக்கைகளையும் நடத்தினார்.
  • சாதி இரண்டொழிய வேறில்லையென்ற தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம் என்று முழங்கியவர் பாரதியார் ஆவார். இவர் மிகச்சிறந்த போராட்ட வீரர்.
  • பாரதியாரின் கவிதைகள் 20ஆம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தன. இவர் தேசியக்கவிஞர் எனப்பாராட்டப் பெற்றவர்.
  • மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதை கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச் சாரும். மக்கள் மேம்பாட்டை அடியொற்றியே அவரது கவிதைகள் அமைந்துள்ளன. தேசிய ஒருமைபாட்டின் உயர்வினை விளக்கும் வகையில் அவரது கவிதை அமைந்திருக்கும்.
  • மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.

இவரது முக்கியமான பாடல்கள் மற்றும் மேற்கோள்கள்

“முப்பதுகோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள்

“பிறனாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”

“தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்”

“காக்கை குருவி எங்கள் ஜாதி”

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”

“மாந்தர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”

“எல்லோரும் இந்நாட்டு மன்னர்”

“ஓடி விளையாடு பாப்பா”

“வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்”

“தண்ணீர் விட்டா வளர்த்தோம், கண்ணீரால் காத்தோம்”

உமறுப்புலவர்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment