சிற்றிலக்கியங்கள் – Chitrilakiyam
Group 4 Exams – Details
- தமிழில் நெடும் பாடல்களாய் அமைந்த பிரபந்த வகைகளைச் சிற்றிலக்கியம் என்று குறிப்பிடுகிறோம்.
- தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தம் என வழக்காறுண்டெனினும் பன்னூறு வகைமைகள் காணப்படுகின்றன.
- பாட்டியல் நூல்கள் என்பன சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை கூறும்.
- பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு நன்கு கட்டப்பட்டது. நன்குயாக்கப்பட்டது என்று பொருள்.
- நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கியக்காலம் (13 – 16 நூற்றாண்டு) என்ற அழைக்கலாம்.
- பாட்டியல் நூல்களுள் வச்சணந்தி மாலை சொல்லக்கூடிய நூலாகும்.
- வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியில் பிரபந்தம் தொண்ணூற்றாறு எனக்கூறி அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.
- பன்னிருபாட்டியல் சிற்றிலக்கியத்திற்கு இலக்கணம் கூறும் நூல்.
- பன்னிருபாட்டியல் – 63 இலக்கியவகைகள் பற்றியும்
- வெண்பா பாட்டியல் – 55 வகை பற்றியும்
- நவதீதப்பாட்டியல் – 53 வகை பற்றியும்
- சிதம்பரப் பாட்டியல் – 63 வைக பற்றியும்
- இலக்கண விளக்கப்பாட்டியல் – 63 வகை பற்றியும்
- முத்து வீரியப்பாட்டியல் – 90 வகை பற்றியும்
- பிரபந்த மரபியல், பிரபந்த தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் – 96 இலக்கிய வகைகள் பற்றிக் கூறுகின்றன