தேவதேவன் – Devadevan
Group 4 Exams – Details
பெயர் | தேவதேவன் |
இயற்பெயர் | பிச்சுமணி கைவல்யம் |
பெற்றோர் | பிச்சுமணி – பாப்பாத்தி |
பிறப்பு | 1948 – தூத்துக்குடி, கைவல்யம் |
ஆசிரியர் குறிப்பு
- நவீன தமிழ்க் கலைஞர்களில் தனித்துவம் மிக்கவர் தேவதேவன். தூத்துக்குடியில் வசித்து வருகிறார்.
- இயற்பெயர் – பிச்சுமணி கைவல்யம்
- இடைநிலை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது கவிதைகள் மற்றும் கவிதை சார்ந்த உரையாடல்கள் மூலம் நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ கவிதைகளுக்கு வளம் சேர்ந்திருப்பவர்.
- இயற்கையின் மீது அளப்பரிய காதல் கொண்ட தேவதேவன் தொடர்ச்சியான தனது செயல்பாடு மற்றும் கவிதைகள் மூலம் மட்டுமே தனக்கான இடத்தை நிறுவியிருப்பவர்.
- இதுவரை தேவதேவன் கவிதைகள் 12 தொகுதிகளாக வந்துள்ளன
- இவரின் “தேவதேவன் கவிதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது
தேவதேவன் கவிதை தொகுப்புகள்
- குளித்துக் கரையேறாத கோபியர்கள்
- மின்னற் பொழுதே தூரம்
- மாற்றப்படாத வீடு
- பூமியை உதறியெழுந்த மேகங்கள்
- நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம்
- சின்னஞ்சிறு சோகம்
- நட்சத்திர மீன்
- அந்தரத்திலே ஓர் இருக்கை
- நார்சிஸஸ் வனம்
- விண்ணளவு பூமி
- விரும்பியதெல்லாம்
Related Links
Group 4 Model Questions – Download