Dr.அம்பேத்கர் – Dr.Ambedkar
பெயர் | Dr.அம்பேத்கர் |
இயற்பெயர் | பீமாராவ்ராம்ஜி |
காலம் | 1891-1956 |
பிறப்பு | மாராட்டிய மாநிலம் – கொங்கன் மாவட்டம் – அம்பவாடே |
பெற்றோர் | இராம்ஜி – சக்பால் |
- இந்தியாவின் இருபெருந்தலைவர்கள் இருந்தார்கள். ஒருவர் பெரியார் மற்றொருவர் அம்பேத்கர். வடக்கே இருந்து அம்பேத்கரும் தெற்கே இருந்து பெரியாரும் இடைவிடாது உழைத்ததனால் சாதி என்னுமு் பாறை உடைந்து சுக்கு நூறானது.
- அம்பேத்கார் 1908-ல் எல்பின்ஸ்டன் பள்ளியில் தம்முடைய உயர்நிலைப் பள்ளிப் முடித்தார். பின்னர் பரோடா மன்னர் பொருளுதவியுடன் 1912-ல் பம்பாய் எல்பினஸ்டன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1915 முதுகலைப் பட்டமும் 1916-ல் இலண்டன் பொருளாதார பட்டமும் பெற்றார்.
- பின்னர் மும்பையில் சிறிது காலம் பொருளியில் பேராசிரியராகப் பணியாற்றினார். மீண்டும் இலண்டன் சென்று அறிவியல் முதுகலைப் பட்டமும் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார். அவர் அரசியல், சட்டம், சமூகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, வாணிகம், கல்வி, சமயம் என அனைத்து துறைகளிலும் நிகரற்ற அறிஞராகத் திகழ்ந்தார். ஒரு நாள்ல் 18 மணி நேரத்தைக் கல்வி கற்பதற்காகவே செலவழித்தார். மனித உரிமைக்காக அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள்.
- அவ்வகையில் தந்தை பெரியார் 1924-ஆம் ஆண்டு கேரளாவில் வைக்கத்தில் நடத்திய ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவு முயற்சியும், 1927-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் நள் அம்பேத்கார் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் நடத்திய தண்ணீர எடுக்கும் போராட்டமும் மனித உரிமைக்காக முதலில் நடத்தப் பெற்ற போராட்டங்கள் எனலாம்.
- வட்டமேசை மாநாடு 1930-ம் ஆண்டு நடைபெற்றது. அம் மாநாட்டில் அண்ணல் அம்பேத்கர் கலந்து கொண்டார். இந்திய அரசியலமைப்பில் அம்பேத்காரின் பங்கு மிகவும் முக்கியமானது. அரசியலமைப்பின் வரைவுக்குழுவின் தலைவராக பணியாற்றிய அவர் இந்திய அரசியலமைப்பை மிகச்சிறப்பாக வடிமைத்தார். விடுதலைக்குப் பிறகு இந்திய அமைச்சரவையில் அண்ணல் அம்பேத்கரையும் இடம் பெறச் செய்ய வேண்டுமென்று நேரு பெரிதும் விரும்பினார். அம்பேத்கரும் அதற்கு உடன்பட்டு சட்ட அமைச்சராக பணியாற்றினார்.
- 1946-அம்பேத்கார் “மக்கள் கல்வி கழகத்தைக்” தோற்றுவித்தார். மும்பையில் அவரின் அரிய முயற்சியலால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தில் இன்றைய அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.
- அம்பேத்கார் எழுதிய இந்தியாவின் தேசிய பங்கு வீதம் என்னும் நூலைப் பொருளாதாத் துறையின் சிறந்த நூலாகக் கருதி பொருளியல் வல்லுனர்களும் பேராசிரியர்களும் பெரிதும் மதித்துப் போற்றினார்கள். இந்திய அரசு பாரத ரத்னா (இந்திய மாமணி) என்னும் உயரிய விருதை அண்ணல் அம்பேத்கருக்கு 1990-ம் ஆண்டு வழங்கி பெருமைப்படுத்தியது.
- ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை அம்பேத்காரையே சாரும் என்றார் நேரு.
- 06.12.1956-ல் புகழுடம்பு எய்தினார்.
Related Links
Group 4 Model Questions – Download