ஏலாதி
நூற்குறிப்பு
- நான்கடியில் ஆறு அருங்கருத்துக்களை இந்நூல் நவில்கிறது
- இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது
- ஏலம் என்னும் மருந்துப் பொருளை முதன்மையாகக் கொண்டு இலவங்கம், சிறு நாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர்.
- இம்மருந்து உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும். அதுபோல இந்நூலின் கருத்துக்கள் கற்போரின் அறியாமையை அகற்றும்.
பாவகை
- இந்நூல் சிறப்பாயிரம், தற்சிறப்பு பாயிரம் உட்பட எண்பத்தொரு வெண்பாக்களைக் கொண்டது.
ஆசிரியர் குறிப்பு
- ஏலாதியை இயறறியவர் கணிமேதாவியார்.
- இவருக்கு கணிதமேதையார் என்னும் மற்றொரு பெயருமுண்டு.
- இவர் சமண சமயத்தவர் என்பர்.
- இவர் ஏலாதியில் சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலிய உயரிய அறக்கருத்துகளை வலியுறுத்திக் கூறுகிறார்.
- கணிதமேதையார் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர்.
- கணி – சோதிடம்
- மேதாவியார் – வல்லவர்
- இவர் திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலை எழுதியுள்ளார்.
ஏலாதி கூறும் கருத்துக்கள்
சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது
மேவல் எளிது; அரிது மெய் போற்றல்; ஆவதன்கண்
சேறல் எளிது; நிலை அரிது; தெளியிராய்
வேறல் எளிது; அரிது சொல்
“வணங்கி வழியொழுகி மாண்டார் சொல் கொண்டு
……………………………………………………………………………………………………..
நூல் நோக்கி வாழ்வான் நுனித்து”
ஒருவன் ஒரு பிறவியில் பெற்ற ஒழுக்கமும் கல்வியுமே அவனுக்கு மறு பிறவியிலும் வந்து பயனளிக்கும் என்னும் கருத்தை இப்பாடல் வலியுறுத்தகிறது