Eratura Mozhithal – இரட்டுற மொழிதல் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

இரட்டுற மொழிதல் – Eratura Mozhithal

TNPSC Tamil Notes - Eratura Mozhithal - இரட்டுற மொழிதல்

Group 4 Exams – Details

நூற்குறிப்பு

  • ஒருசொல்லோ தொடரோ இரண்டு பொருள் தருமாறு பாடுதல் இரட்டுற மொழிதல் என்பர்.
  • இதனைச் சிலேடை என்றும் கூறுவர்

ஆசிரியர் குறிப்பு

பெயர் காளமேகப்புலவர்
இயற்பெயர் வரதன்
பிறந்த ஊர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நந்திக்கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்
பணி திரவரங்கக் கோவில் மடைப்பள்ளியில் பணி புரிந்தார். வைணவ சமயத்திற்கு மாறினார். கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் காளமேகப் புலவர் என அழைக்கப் பெற்றார். இவர், இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.
நூற்குறிப்பு புலவர் பலர் பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டு. இதனை இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்குகிணங்க, சந்திரசேகர கவிராச் பண்டிதர் தமிழகம் முழுவதும் சென்று தேடித் தொகுத்தார்.
நூல் பயன் தனிப்பாடல்களைக் கற்பதனால் தமிழ் மொழியின் பெருமையையும், புலவர்களின் புலமையையும், சொல்லின்பம், பொருளின்பம், கற்பனை இன்பம் முதலியவற்றையும் பெறலாம்.

மேற்கொள்

“வாரிக் களத்தடிக்கம், வந்தபின்பு கோட்டை புகும்,
போரில் சிறந்து பொலிவாகும்” – வைக்கோல் – யானை

“நஞ்சிருக்கும்; தோல் உரிக்கும், நாதர் முடிமேல் இருக்கும்
வெஞ்சினத்தில் பட்டால் மீளாது” – பாம்பு – வாழை

“ஓடும்; சுழிசுத்தம் உண்டாகும்; துன்னலைச்
சாடும்; பரிவாய்த் தலைசாய்க்கும்” – குதிரை – காவிரி

 

குயில்பாட்டு

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment