ஈரோடு தமிழன்பன் – Erode Tamizhanban
Group 4 Exams – Details
ஆசிரியர் குறிப்பு
- ஈரோடு தமிழன்பன் தமிழகக் கவிஞர்.
- இவர் இயற்பெயர் ஜெகதீசன்
- ஆசிரியர், மரபுக்கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர் என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.
இவரின் கவிதைத் தொகுப்புகள்
- சிலிர்ப்புகள் (1970)
- தீவுகள் கரையேறுகின்றன (1970)
- தோணிகள் வருகிறது (1970)
- திரும்பி வந்த தேர்வலம் (19850
- ஊமைவெயில் (1985)
- குடைராட்டினம் (1985)
- சூரியப் பிறைகள் (1985)
- கண்ணுக்கு வெளியே சில கனாக்கள் (1990)
- என் வீட்டுக்கு எதிரே ஒர் எருக்கஞ்செடி (1995)
- நடை மறந்த நதியும் திசைமாறிய ஓடையும்
- காலத்திற்கு ஒருநாள் முந்தி
- ஊமைவெயில் (1985)
- சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள் (2002)
- ஒரு வண்டி சென்ரியு (2002)
- இவர்களோடும் இவற்றோடும் (2003)
- விடியல் விழுதுகள் (2005)
- நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
- ஓலைச்சுவடியும் குறுந்தகடும் (2008)
- சொல்ல வந்தது (2008)
“வணக்கம் வள்ளுவ” என்ற கவிதைத் தொகுப்பிற்காக இவருக்கு 2004-ம் ஆண்டு “சாகித்திய அகாதமி விருது” வழங்கப்பட்டது.