ஜி.யு.போப் என்றழைக்கப்டும் ஜியாரஜ் யுக்ளோ போப் கி.பி.1820-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் எட்வர்டு தீவில் ஜான்போப்புக்கும், கெதரின் யுளாபுக்கும் மகனாக பிறந்தார்.
போப்பின் தமையனார் ஹென்றிஎன்பவர் தமிழகத்தில் கிறித்துவ மதத்தை பரப்பும் சமய குருவாக பணியாற்றியவர். தமையனாரை பின்பற்றி ஜி.யு.போப் தமிழகம் வந்தார்.
தமிழகம் வந்ததும் தமிழர் முன்னிலையில் சொற்பொழிவு ஆற்றும் அளவுக்குத் தம் திறமையை மேம்படுத்திக் கொண்டார்.
தமிழ் நாட்டில் சென்னை சாந்தோம் பகுதியில் சமயப்பணி ஆற்றிய போப், பின்னர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்று சாயர்புரத்தில் தங்கி சமயப்பணி ஆற்றத் தொடங்கினார். கணிதம், அறிவாய்வு (தருக்கம்) மெய்யறிவு (தத்துவம்) ஆகியவற்றைக் கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
1850 இங்கிலாந்தில் திருமணம் செய்து கொண்ட போப் பின் தன் மனைவியுடன் தமிழகம் வந்து தஞ்சாவூரில் சமயப் பணியாற்றினார்.
திருக்குறள், திருவாசகம், நாலடியார் முதலிய நூல்களை பலமுறை படித்து அவற்றின் நயங்களை உணர்ந்தார். அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில் தமிழ்மொழி பற்றி ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார். அக்கட்டுரைகளில் புறநானூற்றுப் பாடல்களும், புறபொருள் வெண்பா மாலை திணை விளக்கங்களும், தமிழ்ப்புலவர் வரலாறும் இடம் பெற்றிருந்தன.
மேலைநாட்டார் தமிழை எளிதில் கற்றக் கொள்ளும் வகையில் தமிழ் – ஆங்கில அகராதி ஒன்றையும், ஆங்கிலம் – தமிழ் அகராதி ஒன்றையும் போப் வெளியிட்டார். 1858ஆம் ஆண்டில் உதகமண்டலம் சென்ற அவர், பள்ளி ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். தாயகத்திற்கு சென்ற போப் 1885 முதல் 1908ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகளாக இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணிபுரிந்தார்.
திருக்குறளை 40 ஆண்டுகள் படித்து சுவைத்த போப் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
தமது 86-ம் அகவையில் 1900 ஆம் ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பினை வெளியிட்டார். தம் இறுதி காலத்தில் புறப்பொருள், வெண்பாமாலை, புறநானூறு மற்றும் தீருவருட்பயன் முதலிய நூல்களையும் பதிப்பித்தார்.
போப் 1908ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 11-ஆம் நாள் தம் இன்னுயிரை நீத்தார். அவர் தம் கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என எழுத வேண்டுமென்று தனது இறுதி முறியில் எழுதி வைத்தார்.