ஞானக்கூத்தன் – Gnanakoothan
Group 4 Exams – Details
பெயர் | ஞானக்கூத்தன் |
இயற்பெயர் | அரங்கநாதன் |
பிறந்த இடம் | திருஇந்தளூர், தஞ்சை (07.10.1938) |
படைப்புகள்
- ஞானக்கூத்தன் கவிதைகள்
விருதுகள்
- சாரல் விருது – 2009
- விளக்கு விருது – 2004
இவர் பற்றி
- மரபுக் கவிதைகளில் தொடங்கி, பின் நவீனக் கவிதைகள் எழுதி, தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் தன் முத்திரையைப் பதித்தவர்.
- ஞானக்கூத்தன். இன்றுவரை அவருடைய கவிதைகள் கவிஞர்களிடையே, எழுத்தாளர்களிடையே, வாசகர்களிடையே பேசப்பட்டுக் கொண்டிருக்கிறன்றன.
- 1960-ல் திருமந்திரத்தை படித்த பாதிப்பில் ஞானக்கூத்தன் என்கிற புனைப்பெயரை சூட்டிக்கொண்டார்.
- அறுபதுகளில் சி.சு.செல்லப்பா, க.நா.சு., சி.மணி, ந.முத்துசாமி, ஏ.கே.இராமானுஜன் போன்றோருடன் இணைந்து செயல்பட்டார்.
- முதல் புதுக்கவிதைகள் நடை இதழில் வெளியாகத் தொடங்கின. எழுபதுகளில் க்ரியா, எஸ்.இராமகிருஷ்ணன் ஆகியோரோடு இணைந்து கசடதபற இதழைத் தொடங்கினார்.
- பிறகு ழ.கவனம் போன்ற இதழ்களின் பொறுப்புகளில் பங்கேற்றார். அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் பல கவிதை அரங்குகளுக்குச் சென்றிருக்கிறார். ஞானக்கூத்தனின் தனித்தன்மை அவரது கவிதைகளின் தனிதன்மை மட்டுமல்ல.
- தமிழ்மரபின் தொடர்ச்சியும் கூட ஞானக்கூத்தனின் கவிதைகளில் உள்ள அங்கதம் சிறப்பானது.
- இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் கவிஞராக போற்றப்படுகிறார்.
- இவரின் கவிதைகள், “கல்கி”, “காலச்சுவடு” மற்றும் “உயிர்மெய்” போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
- 1952-லிருந்து கவிதைகள் எழுதத் தொடங்கிய ஞானக்கூத்தனின் இளமைப் பருவ அரசியல் ஈடுபாடு தமிழ் மாநில சுயாட்சி, தமிழக எல்லை மீட்பு போராட்டங்களிலும் பொதுவுடைமை ஆதரவுச் செயல்பாடுகளிலும் இருந்தது.
Related Links
Group 4 Model Questions – Download