Isai Kalai – இசைக்கலை பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

இசைக்கலை – Isai Kalai

TNPSC Tamil Notes - Isai Kalai

Group 4 Exams – Details

 • இசை என்றும் சொல் “இயை” என்னும் வேர்சொல்லில் இருந்து தோன்றியது.
 • இசையானது “கந்தருவ வேதம்” என்று அழைக்கப்படும் சிறப்பினை உடையது.
 • இன்னிசை, ஒத்திசை, தொகுப்பிசை என மூன்றாகப் பிரிப்பர்.
 • ஒற்றைச் சுரங்கள் இனிமையாகச் சேர்வது இன்னிசை இந்திய இசை இன்னிசை வகையைச் சேர்ந்தது.
 • ஒத்த சுரங்களின்  சுர அடுக்குகள் தம்மன் ஒத்திசைப்பது “ஒத்திசை” எனப்படும். மேலை நாட்ட இசை இந்த வகையைச் சார்ந்ததாகும்.
 • ஒவ்வோர் சுரத்திற்கும் வேறொர் இணைச்சுரம் சேர்க்கப்பட்டு இரண்டும் ஒன்றாக இசைப்பது தொகுப்பிசை ஆகும்.
 • இசையின் ஒலிக்குறிப்பு சுரம் எனப்படும்
 • சுரம் என்பதற்கு இனிமை உடையது என்று பொருள்.
 • இசைத்தல் என்பது பொருள்
 • இசைத்தல் என்பதற்கு பொருந்துதல், ஒன்றாதல் என்று பொருள்
 • இந்தியாவில் இந்துஸ்தானி இசை, கருநாடக இசை என்ற இரு பிரிவுகள் இன்று வழக்கில் உள்ளன

சுரங்களின் பெயர்கள் வருமாறு

பழந்தமிழ் நூல்கள் சுரங்களின் பெயர்கள் சுரக்குறியீடு
குரல் சட்சம்
துத்தம் ரிஷபம் ரி
கைக்கிளை காந்தாரம்
உழை மத்தியம்
இளி பஞ்சமம்
விளரி தைவதம்
தாரம் நிஷதம் நி
 • இவை ஏழு சுரங்கள் எனப்படும்
 • ஏழு சுரங்களும் ஒன்றைவிட மற்றது வலியது என்ற வரிசையில் ஒலிப்பது ஆரோசை (ஆரோகணம்) ஆகும்.
 • ஏழு சுரங்களையும் இறங்கு வரிசையில் ஒலிப்பத அமரோசை (அவரோகணம்) ஆகும்.
 • சுரம் என்பதற்கு உரிய தமிழ்ச்சொல் “நரம்பு” என்பதாகும்.
 • சுரங்கள் சேர்ந்தத “ராகம்” ஆகம்
 • ராகம் என்பதற்கு உரிய தமிழ்ச்சொல் “பண்” என்பதாகும்.
 • பூபாளம், முகாரி, நீலாம்பரி போன்ற பல ராகங்கள் உண்டு.
பொழுது பாட வேண்டிய ராகம்
விடியல் கேதாரம், தன்னியாசி
முற்பகல் சாவேரி, தேவமனோகரி
நண்பகல் ஸ்ரீராகம், மத்தியமாவதி
பிற்பகல் முகாரி, பேகடை
மாலை கல்யாணி, வசந்தம்
எல்லா நேரங்களிலும் பைரவி, சங்கராப்பரணம், காம்போதி, ஆரபி
 • தேவாரப் பாடல்களின் இசையைப் பகற்கண், இராப்பண், பொதுப்பண் என மூன்றாகப் பிரித்துள்ளனர்.

இசைக்கருவிகள்

 • உலகில் இசைக்கப்படும் எல்லா இசைக் கருவிகளுக்கும் அடிப்படையான இசைக்கருவிகள் எல்லாம் கிழக்கு நாடுகளில் தோன்றின.
 • தமிழ்நாட்டில் இசைக்கருவிகளை நான்கு வகையாகப் பிரிப்பர்
  1. தோல்கருவி
  2. துளைக்கருவி
  3. நரம்புக்கருவி
  4. கஞ்சக்கருவி
 • கஞ்சக்கருவி என்பது உலோக கருவிகளை குறிக்கும்
 • போடுவோரின் மிடற்று ஓசையும் சேர்த்து ஐந்தையும் “பஞ்சமா சத்தம்” என்பர்
தோற்கருவிகள் துளைக்கருவிகள்
பேரிகை, படகம், இடுக்கை, உடுக்கை, மத்தளம், சல்லி, கரடி வங்கியம், கொம்பு, தாரை, குழல், காளம், சங்கு
நரம்புக்கருவிகள் கஞ்சக்கருவிகள்
யாழ், வீணை, கின்னரி கைமணி, தாளம், கஞ்சதாளம், கொண்டி
 • பஞ்ச மரபு என்ற பண்டைய இசைத்தமிழ் நூல் பாடகர் பாடுவது மிடற்று கருவி என்று கூறுகிறது.
 • இன்று மேலைநாட்டு இசைக்கருவிகளம் பயன்படுத்தப்படுகின்றன.
 • இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மாதவியைக் பற்றி கூறும்போது “நாடகம் ஏத்தும் நாடக கணிகை” என்று குறிப்பிடுகின்றார்.
 • முதற்சங்கத்தில் பெருநாரை, பெருகுருகு (முதுநாரை, முதுகுருகு) என்ற நூல்கள் இருந்தன.
 • பெருகுருகு என்பது துணைக்கருவிகள் பற்றிய இசை நூல்.
 • இடைச்சங்கத்தில் பேரிசை, சிற்றிசை என்ற இசைநூல்கள் இருந்தன. கடைச்சங்கத்தில் இசைமரபு, இசைநுணுக்கம், ஐந்தொகை அல்லது பஞ்சமரபு என்னும் இசை நூல்கள் இருந்தன.
 • தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியம், காப்பியங்கள், பதினெண்கீழ்கணக்கு நூல், நிகண்டுகள், சைவ வைணவ நூல்கள், புராணங்கள் சிற்றிலக்கியங்கள், உரைநூல்கள் என எல்லாவற்றிலும் இசைத்தமிழ் குறித்த, தமிழ் இசை குறித்த பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.
 • அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பஞ்சபாரதீயம், பரதசேனாபதீயம், மதிவாணர் நாடகத்தமிழ், இசைநுணுக்கம், பஞ்சமரபு, தாளவகை ஒத்து என்ற இசை இலக்கண நூல்களை குறிப்பிட்டுள்ளார்.
 • ஐந்து திணைக்கும் உரிய “யாழ்” குறித்து இலக்கண நூல்கள் கூறுகின்றன.

தமிழிசை வரலாறு

 • ஒவ்வொரு இனத்திற்கும் உரியதாய் ஓர் இசை மரபு இருக்கும். தமிழுக்கு உரிய இசை மரபு தமிழிசை ஆகும்.
 • பரிபாடல் தூக்கு, வண்ணம் குறித்துக் கூறுகிறது. கலித்தொகையின் தாசிழிசை இசைப்பாட்டே
 • பாணரும், கூத்தரும் இசைவளர்த்த கலைஞர்களே ஆவர்.
 • சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை, கானல்வரி, ஆய்ச்சியர் குரவை, வேட்டுவவரி, குன்றக்குரவை பகுதிகள் இசைப் பற்றியன.
 • களப்பிரர் காலத்தில் காரைக்கால் அம்மையாரின் திருவண்ணத்தந்தாதி போன்ற பதிகங்கள் இசையுடன் பாடப்பட்டன.
 • பல்லவர் காலத்தில் மூவர் முதலிகள் தமிழ் இசைைய நன்கு வளர்த்தனர்.
 • சம்பந்தர் யாழ்முறி பதிகம் பாடினார்.
 • நம்மாழ்வாரின் திருவாய்மொழி இசையை மேலும் வளர்த்தது.
 • கொங்குவேள் மாக்கதையாகிய பெருங்கதை யாழிசை குறித்த பல செய்திகளைக் கூறுகிறது. உதயணன் இசைப்பாடி வென்ற சுரமஞ்சரியை மணக்கின்றான்.
 • முதலாம் மகேந்திரனின் குடுமியான் மலைக் கல்வெட்டு இசைக் கல்வெட்டாகும்.
 • பெரியபுராணத்தில் ஆனாயநாயணர் புராணத்தில் குழலிசை பற்றியும் திருநீலகண்ட நாயணார் புராணத்தில் யாழ்த்திறம் பற்றியும் குறிப்புகள் உள்ளன.
 • திருவிளையாடல் புராணங்களில் அமைந்துள்ள சாதாரி பாடின திருவிளையாடல், விறகு விற்ற திருவிளையாடல் ஆகிய இசை பற்றியன.
 • அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்கள் தாளக் கலைக்கு வேதமாக திகழ்கிறது.
 • தமிழிசையும் ஆரிய சங்கீதமும் கலந்த கர்நாடக சங்கீதம் தோன்றியது என்பர்.
 • பண்டைய தமிழிசை கருநாடக சங்கீதமாக வழங்ககிறது என்று தண்டபாணி தேசிகர் போன்றோர் கருதுகின்றனர்.
 • ராகத்தை முதன்மையாகக் கொண்டது சங்கீதங்கள்
 • சங்கீதத்தோடு பாட்டும் இணைந்தது சாகித்தியங்கள்.
 • சீர்காழியில் பிறந்த முத்துத்தாண்டவர் (1525 – 1600), மாரிமுத்தாப்பிள்ளை (1712 – 1782) அருணாச்சலக்கவிராயர் (1711 – 1778) ஆகிய மூவரும் தமிழ் பாடி தமிழிசை வளர்த்தனர்.
 • இம்மூவரையும் “தமிழ் மூவர்” என்றம் “சீர்காழி மூவர்” என்றும் “கருநாடக சங்கீத ஆதி மும்மூரத்திகள்” என்றும் போற்றுவர்.
 • இம்மூவரே பல்லவி – அனுபல்லவி – சரணம் அமைப்பில் பாடும் பாடல் மரபைத் தோற்றுவித்தனர்.
 • இம்மரபைப் பின் வந்த  சங்கீத மும்மூரத்திகள் பின்பற்றினர்.
 • நாயக்கர் காலத்தில் தியாகையர் (1767 – 1847), சியாமசாஸ்திரிகள் (1762 – 1827), முத்துசாமி தீட்சிதர் (1776 – 1835) மூவரும் கீர்த்தனைகள் பாடினர்.
 • 19-ம் நூற்றாண்டில் கோபால கிருஷ்ண பாரதியார் முன்சீப் வேதநாயகம் பிள்ளை, இராமலிங்க அடிகள் போன்றோர் இசைப்பாக்களையும் கீரத்தனைகளும் இயற்றினர்.
 • 20-ம் நூற்றாண்டில் ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள், அண்ணாமலைச் செட்டியார் ஆகியோர் இசைத் தொண்டு புரிந்தனர்.
 • ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம் என்ற நூலை இயற்றினார். இது 1346 பக்கங்களை கொண்டது.
 • அண்ணாமலை செட்டியார் தமிழிசைச் சங்கம் வைத்து தமிழிசையைக் காத்தார்.
 • தண்டபாணி தேசிகர், சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் தமிழ் இசைக்குப் பாடுபட்டவர்களாவர்.


நாடகக்கலை

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment