கலிங்கத்துப்பரணி – Kalingathu Parani
Group 4 Exams – Details
நூற்குறிப்பு
நூல் | கலிகத்துப்பரணி |
பாடல் வகை | கலித்தாழிழை |
பாடல் எண்ணிக்கை | 599 தாழிசைகள் |
ஆசிரியர் | செயங்கொண்டார் |
- 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சாரந்த நூல்
- இதுவே தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி நூல்.
- போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
- முதல் குலோத்துங்கனின் (1078 – 1118) கலிங்க வெற்றியைப் பாடும் நூல்
- ஆசிரியர் : கவிச்சக்கரவர்த்தி எனப் பாரட்டப்படும் ஜெயங்கொண்டார். சோழனின் அவைக்களப்புலவர்
- சந்தநயம் பொருந்திய 599 பாடல்களைக் கொண்டது.
- வடங்கர் குலவேந்தன் அனந்தவர்மன் (அனந்தபத்மன்) கலிங்கத்தை ஆண்ட மன்னன்.
- இவன் திறை செலுத்தாததால் குலோத்துங்கன் படையெடுத்தான்.
- சோழர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்றவன் கருணாகரத் தொண்டைமான்.
- 13 பகுதிகளைக் கொண்டது.
1. கடவுள் வாழ்த்து | குலோத்தங்கன் நீடூழி வாழ இறைவனை வாழ்த்தி வணங்கும் பகுதி |
2. கடை திறப்பு | ஊடல் நீங்கி கதவுகளைத் திறக்கப் பெண்களை வேண்டும் பகுதி |
3. காடு பாடியது | பாலை நில வெப்பக் கொடுமையைப் பாடிய பகுதி |
4. கோயில் பாடியது | பாலை நிலத்தில் அமைந்திருக்கும் காளிதேவியின் கோயிலைப் பாடிய பகுதி |
5. தேவியைப் பாடியது | காளிதேவியின் தோற்றத்தை அடி முதல் முடி வரை வருணிக்கும் பகுதி |
6. பேய்களை பாடியது | பேய்களைப் பற்றிய வருணனைப் பகுதி |
7. இந்திரசாலம் | ஒரு முதிய பேய் தேவி முன் இந்திரசால வித்தைகளைச் செய்த காட்டும் பகுதி |
8. இராச பாரம்பரியம் | குலோத்துங்கனின் குல முன்னோர்கள் பற்றிக் கூறும் பகுதி |
9. பேய்முறைப்பாடு | பசிக்கொடுமை தாங்காமல் பேய்கள் தேவியிடம் முறையிடும் பகுதி |
10. அவதாரம் | குலோத்துங்கன் அவதரித்த சிறப்பைக் கூறும் பகுதி |
11. காளிக்குக் கூளி கூறியது | கலிங்கப்போரை நேரில் பார்த்து வந்த கூளி, அப்போர் பற்றிக் காளிதேவிக்குக் கூறிய பகுதி |
12. போர் பாடியது | கலிங்கப்போர் பற்றிக் கூறும் பகுதி |
13. களம் பாடியது | கலிங்கப்போரை எடுத்துரைத்த பேய் போர்களத்தை நேரில் சென்று காணும்படி காளிதேவியை வேண்டியது. |
- இப்பதின்மூன்றில் கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, இராசபாரம்பரியம், அவதாரம் என்ற நான்கு பகுதி தவிர மற்ற ஒன்பது பகுதியும் போர் வருணனைகளே ஆகும்.
- “பரணிக்கோர் ஜெயங்கொண்டார்” என பலட்டடை சொக்கநாதப்புலவர் பாராட்டுகிறார்.
- இந்நூலைத் “தென்தமிழ்த் தெய்வப்பரணி” என்று ஒட்டக்கூத்தர் பாராட்டியுள்ளார்.
- குலோத்துங்கள் இதன் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு தங்கத் தேங்காயை பரிசாக அளித்தான்.
- இசை ஆயிரம், உலா, மடல் போன்ற நூல்களையும் ஜெயங்கொண்டார் பாடியுள்ளார்.
ஆணை ஆயிரம் அமரிடை வென்ற – பன்னிரு பாட்டியல் நூற்பா |
- தோற்றோரின் நாட்டின் பெயரால் பாடுவது – பரணி
மேற்கோள்
தீயின் வாயின்நீர் பெறினும் உண்பதோர்
சிந்தை கூட வாய்வெந்த உலர்ந்து, செந் நாயின் வாயின்நீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமா |
நாயின் வாய்நீரை நீர் என மான் நக்கும் எனப் பாலை நிலத்துக் கொடுமையை கூறுகிறது. “காடுஇதனைக் கடத்தும் எனக் கருமுகிலும் வெண்மதியும் கடக்க அப்பால் ஒடிஇளைத்து உடல்வியர்த்த வியர்வுஅன்றோ உருபுனலும் பனியும் அம்மா” என்பது பாலை நிலத்து வழியாகக் கடந்து சென்ற கருமுகிலும் நிலவும் வெப்பம் தாங்காது ஓட முகிலிலிருந்த வடியும் வேர்வை மழையாகவும், நிலவின் வேர்வை பனியாகவும் பொழிகிறது என்று பாலையின் கொடுமையைக் கூறுகிறது. |
“பொருதடக்கை வாள்எங்கே மணிமார்பெங்கே
போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொடாத” பருவயிரத்தோள் எங்கே எங்கே என்று பயிரவியைக் கேட்பாளைக் காண்மின்காண்மின்” – இது போர்களக் காட்சியைப் பாடுகிறது |
விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கப்பட்டுள்ளது
“விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண |