கலித்தொகை
நூற்குறிப்பு
ஆசிரியர் எண்ணிக்கை | 5 |
பாடல் எண்ணிக்கை | 150 |
எல்லை | 11-80 |
பொருள் | அகம் |
தொகுத்தவர் | நல்லந்துவனார் |
தொகுப்பித்தவர் | தெரியவில்லை |
கடவுள் வாழ்த்து பாடியவர் | நல்லந்துவனார் |
தெய்வம் | சிவன் |
பா வகை | கலிப்பா |
- கலிப்பாவால் ஆன 150 பாடல்களைக் கொண்ட தொகை நூல் இது.
- அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிறு பாவினும் உரிய தாகும் என்மனார் புலவர் |
இதில் கடவுள் வாழ்த்து உட்பட 150 பாடல்களும் இன்றும் கிடைக்கின்றன.
கலி | பாடல்கள் | ஆசிரியர்கள் |
குறிஞ்சி | 29 | கபிலர் |
முல்லை | 17 | நல்லுருத்திரன் |
மருதம் | 35 | மருத இளநாகனார் |
நெய்தல் | 33 | நல்லந்துவனார் |
பாலை | 35 | பெருங்கடுக்கோ |
கடவுள் வாழ்த்து | 1 | நல்லுந்துவனார் |
முதலிலுள்ள கடவுள் வாழ்த்தையும் இறுதியிலுள்ள நெய்தற்கலியையும் பாடி இந்நூலை தொகுத்தவர் நல்லந்துவனார் என்று நச்சினார்க்கினியர் குறித்துள்ளார்.
- கலிப்பா : கலித்தளை விரவித் துள்ளலோசை உடையதாய்த் தரவு, தாழிசை, அம்போதரங்கம், அராகம், தனிச்சொல், சுரிதகம் என்னம் உறுப்புகள் அமையச் சுவைபடப்பாடும் வகையாகும்.
- நல்லுந்தவனார் இயற்றிய மாமலர் முண்டகம் எனத் தொடங்கும் நெயதல் திணைப்பாடல் முதன்மையான ஒன்றாகும்.
“ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப்படுவது படறிந்தொழுகுதல்;
அன்பெனப் பவடுவத தன்கிளை செறாஅமை
பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்”
கலித்தொகைப் பாடல்கள் உணர்ச்சி கொந்தளிப்பன உள்ளத்தைத் தொடுவன எனலாம்.
நல்லந்துவனார் வரலாறு
இவரது இயற்பெயர் அந்துவனார் என்பதாம். இப்பெயரின் முன் “ந” என்னும் சிறப்புடைச் சொல் சேர்த்து வழங்கப்படுதலால் இவர் சிறப்பை உணரலாம்.
மேற்கோள்
9ஆம் வகுப்புஎழுந்தது துகள், ஏற்றனர் மார்பு முல்லைக்கலி – கலித்தொகை ஏறு தழுவுதல் களம் குறித்த அடிகள், காட்சியையும், காளைகளின் பாய்ச்சல் பற்றியதும் கூறுகிறது. |
9ஆம் வகுப்புமருதநிலப் போருக்கு செல்லும் வீரர்களையும், காளைகளையும் ஒப்பிட்டுக்கூறுகிறது நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, (கலி – 106: அடி 7-10) |
1ஆம் வகுப்புபிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி, உதவுதல் பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் (கலி.139) |
Sir daily current affairs anuppunga sir
Plzz