கம்பராமாயணம்
நூற்குறிப்பு
- இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. வால்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் அதனைத் தமிழில் இயற்றினாார். கம்பர் இயற்றிய இராமாயணம் கம்ப ராமாயணம் எனப்பட்டது. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமவதாரம் எனப் பெயரிட்டார்.
- இந்நூல் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது. காண்டம் என்பது பெரும் பிரிவையும், படலம் (118 படலம்) என்பது அதன் உட்பிரிவையும் குறிக்கும்.
- “தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பினால் உச்சநிலை அடைந்தது”.
- இந்நூலின் சிறப்புக் கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விருநூல்களையும் தமிழுக்கு கதி என்பர் பெரியோர். (7வது காண்டம் – உத்ரகாண்டம் – ஒட்டக்கூத்தர்)
- கம்பராமாயணம் பெருங்காப்பித்திற்குரிய இலக்கணங்களை முழுமையாக பெற்றது. சொற்சுவையும், பொருட்சுவையும் தமிழ்ப்பண்பாடும் மிளிர்ந்துள்ளது
ஆசிரியர் குறிப்பு
- கம்பர் தேரழுந்தூரில் பிறந்தார். இவ்வூர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. கம்பரின் தந்தையார் ஆதித்தன். கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தார். இவரைத் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் ஆதரித்தார்.
- கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு. இவர் செய்நன்றி மறவாத இயல்பினர். தம்மை ஆதரித்த வள்ள சடையப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல்வீதம் பாடிச் சிறப்பித்துள்ளார்.
- “சடகோபரந்தாரி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்” ஆகியன கம்பர் இயற்றிய பிறநூல்கள்.
- ஏர் எழுபது, திருக்கை வழக்கம் இரண்டும் உழவு பற்றியது.
- ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தார், புகழேந்தி ஆகியோர் இவர் காலத்துப் புலவர்கள்.
கம்பராமாயணம் தொடர்பான செய்திகள்
வால்மீகியும் கம்பரும்
- வால்மீகி ராமாயணத்தில் உள்ள பலவற்றைக் கம்பர் தம் காவியத்தில் அவ்வாறே தந்துள்ளார். சிலவற்றை விரித்துள்ளார். வால்மீகி சொல்லாதவற்றையும் தாமே படைத்துக் காட்டியுள்ளார். வால்மீகியின் உத்தரகாண்டத்தைக் கம்பர் தம் காவியத்தில் படைக்கவில்லை. தமிழ்ப் பண்பிற்கு இசையுமாறு மங்கல விழாவோடு முடித்தலே சிறப்பு என்று கருதி உத்தரகாண்டத்தை விட்டுவிட்டார் என எண்ணத் தோன்றுகிறது.
- வாலியின் மகன் அங்கதனைப் பற்றி வால்மீகி சொல்லாத முறையில் சொல்லியுள்ளார். அங்கதன் அடைக்கலம் கம்பரின் புதிய படைப்பு. கம்பரின் மாயாசனகப் படலம் வால்மீகி நூலில் இல்லாதது.
- வாலி இறந்த பிறகு அவனுடைய மனைவி தாரையைச் சுக்கிரீவன் தன் மனைவியாக்கிக் கொண்டான் என்பது வால்மீகி இராமாயணத்தில் உள்ள கதை. ஆனால் கமபர் தம் நூலில், கணவரை இழந்த பின் தாரை, மங்கல அணி துறந்து துயரமே வடிவாக விதவை வாழ்வு நடத்துவதாக காட்டியுள்ளார்.
- வால்மீகி இராமாயணத்தில் இரணியன் பற்றிய விளக்கம் இல்லை. கம்பர் அதை தனிப்படலமாக எழுதியுள்ளார்.
- சீதையும், இராமனும் திருமணத்திற்கு முன் கண்டு காதல் கொண்டதாக வால்மீக கூறவில்லை. கம்பர் அவர்களின் திருமணத்தை காதல் மணமாக அமைத்துக் காட்டியுள்ளார். மிதிலை நகரத் தெரு வழியே இராமன் நடந்தசென்ற போது கன்னிமாடத்தில் நின்றிருந்த சீதை அவனைக் கண்டாள் என்றும், இராமனும் அவனைக் கண்டாள் என்றும் கூறி அவர்களுக்குள் காதல் வளர்ந்து வந்தாக விளக்கியுள்ளார்.
- இராவணன் சீதையை கைகளால் பற்றி தூக்கி சென்றதாக வால்மீகி கூறியுள்ளார். சீதையின் உயர்வுக்கு ஓர் இழுக்குபோல் அது தோன்றிய காரணத்தால், பஞ்சவடிவ பர்ண சாலையில் இருந்து சீதையை குடிசையோடு பெயர்த்து எடுத்து சென்று இலங்கையின் அசோகவனத்தில் சிறைவைத்தான் என்றும் அவளை தொடவில்லை என்றும் கம்பர் கூறியுள்ளார்.
- கோசல நாட்டையும் வட நாட்டு மன்னர் பரம்பரையும் பாராட்டும் நூலாயினும் சோழநாடு மற்றும் தமிழ் மன்னர்களின் ஈடும் எடுப்புமற்ற பெருமித நிலையின் சாயலையே நாம் கம்பனின் இராமகதையில் காண்கிறோம்.
- கம்பர் தம்முடைய நூலுக்கு இராமாவதாரம் என்றோ இராமகதை என்றோ பெயர் சூட்டியிருக்க வேண்டும் என்பதைச் சிறப்புப்பாயிரம் உணர்த்துகிறது. “காசில் கொற்றத்து இராமன் கதை” எனவும் “இராமாவதாரப் பேர்த்தொகை நிரம்பிய தோமறு மாக்கதை” எனவும் வரும் பாயிரப் பகதிகளால் இதை அறியலாம்.
மேற்கோள்கள்
- “கல்வியிற் பெரியவர் கம்பர்”, “கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்”, “கவிச்சக்கரவர்த்தி கம்பர்” போன்ற தொடர்கள் அவர் பெருமையை பறைசாற்றுவன.
- கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பாரதியார் பாராட்டுவதையும் நோக்குக. பல்கலை நலமும் பொதுளிய கருவூலமாக இராமகதை திகழ்கிறது. மானுடம் பாடும் காப்பியம் என அது சிறப்பிக்கப்படுவதற்குக் காரணம், மாந்தர்கள் அனைவரும் நயத்தக்க நாகரிகம் உடையவர்களாகப் படைக்கப்பட்டிருப்பதனாலேயாம்.
பா வகை
- கம்பர் தாம் பாடிய இராமாயணத்திற்கு இராமவதாரம் எனப் பெயரிட்டார். பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரையிலுள்ள ஆறு காண்டங்களையும் 118 படலங்களாகப் பகுத்து 10,589 விருத்தப்பாக்களால் பாடியுள்ளார்.
சிறந்த தொடர்கள்
- கம்பராமாயணம் சிறந்த தொடர்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.
- இராமன் தனக்குப் பதவி கிடைக்கிறது என நயக்கவும் இல்லை. கிடைக்காத போது வெறுக்கவுமில்லை. இரண்டு நிலையிலும் அவவன்முகம் செந்தாமரை போல் மலர்ந்தே விளங்கியது.
“இப்பொழு தெம்மனோரால் இயம்புதற் கெளிதோ? யாரும் செப்பருங் குணத்திராமன் திருமுகச் செவ்வி நோக்கின் ஒப்பதே முன்பு பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது, அலர்ந்த செந்தா மரையினை வென்றதம்மா!” |
- சீதை அயலவன் நாட்டில் காவலில் இருந்த போதும் கற்பும் பொற்பும் விளங்குமாறு பொறுமையுடன் இராமன் வரவு நோக்கிக் காத்திருந்தாள். இதைக் கண்டு வந்த அனுமன் இராமனிடம் தன் சொல்லாற்றல் தோன்றச் சீதையைப் புகழந்துரைத்தான்.
விற்பெருந் தடந்தோள் வீர வீங்குநீர் இலங்கை வெற்பில் நற்பெரும் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன் இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும்பொறை என்பது ஒன்றும் கற்புஎனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக் கண்டேன் |
- இக் கதையில் எதிர்த் தலைவனாக வரும் இராவணன் எல்லா நலன்களும் வாய்ந்திருந்தும் அயன்மனை நயத்தலாகிய குற்றத்திற்கு ஆட்பட்டிருந்தான். இதை அவன் தம்பியாகிய கும்பகர்ணன் வாயிலா இடித்துரைக்கச் செய்வார் கம்பர்.
- “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்”
- இன்று போய் நாளை வா
ஆசில்பர தாரம் அவை அஞ் சிறை அடைப்போம் மாசில்புகழ் காலுறுவேம் வளவை கூறப்; பேசுவது மானம் இடைபேணுவது காமம் கூசுவது மானுடரை நன்றுநம கொற்றம் |
- இத்தகைய இராவணனும் முதற்போரில் தோற்றவிடத்து நானம் கொண்டு கூனிக் கொண்டு கூனிக் குறுவதை எவ்வளவு நயமாக காட்டுகிறார் கம்பர்
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடுவயிரத் நான்நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்ற அதற்கு நாணான் வேல்தகு நெடுங்கண், செவ்வாய் மெல்லியல் மதிலை வந்த சானிகி நகுவள் எனறே நாணத்தால் சாம்புகின்றான். |
- இராமன் , குகன், சுக்கீரிவன், வீடணன் மூவரையும் தன் தம்பிகளாகவே ஏற்றுக் கொண்டமை பற்றிக் கம்பர் தொடர்ந்து பாடி வரும் அழகு சமத்துவக் கோட்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். திருமங்கையாள்வாரின் கற்பனையிலிருந்து இதனைக் கம்பர் வளர்த்துத் தந்துள்ளார்.
- இராமன் வீடணனிடம்.
குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான் மகனொடும், அறுவர் ஆனேம்; எம் உழை அன்பின் வந்த அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்; புகலருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை |
என்று கூறுவதிலிருந்து இதையுணரலாம்.
- மிதிலைக் காட்சி, அங்கதன் அடைக்கலம், மாயாசனகப் படலம், தாரையின் விதவைக்கோலம், சீதையை பர்ண சாலையுடன் இராவணன் தூக்சிச் சென்றமை யாவும் வான்மீகத்த்தில் இல்லாமல் கம்பர் கதைச் சுவைக்காகவும், தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்காகவும் புகுத்தியன என்பர்
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால் திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால் உண்மை இல்லைபொய் உரை இலாமையால் ஓண்மை இல்லைபல் கேள்வி ஓங்கலால் |
- என வரும் பல பகுதிகள் கம்பரின் கற்பனைத் திறனை மட்டுமின்றிக் குறிக்கோள் நோக்கினையும் புலப்படுத்தும்.
- உணர்ச்சிக்கேற்ற நடை என்பதில் கம்பர் யாவரையும் விஞ்சி நிற்கிறார். கம்பர் சொற்களைப் பின்னுகிறார் என்பதை விட கருத்துகளை நெய்கிறார் என்பதை விட உணர்ச்சிகளையே குழைத்து உருவாக்குகிறார் என்ற கூறலாம். தமிழ் மொழியைக் கையாள்வதில் அவர் பெருவெற்றி பெற்றுத் திகழ்கிறார். பாட்டின் ஓசையிலும் நடையிலும்வைத்து மாந்தர் நடையை அவர் உணரந்த்தும் திறம் ஒன்றையுணர்தாலே விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் என்ற உண்மை புலப்படும்.
- கம்பராமயணத்தில் தாழ்ந்த குலத்தை சார்ந்த குகனைத் தனது தம்பியாக இராமன் ஏற்றுக்கொண்டு பேசும் பாடல் சிறப்பான ஒன்று
துன்புள தெனின் அன்றோ சுகமுளது அதுவன்றிப் பின்புள திடைமன்னும் பிரிவுளதென உன்னேல் முன்புளெம் ஒருநால்வேம் முடிவள தென உன்னா அன்புள இனிநாம ஒர் ஐவர்கள் உளரானோம் |
- என ராமன் தனது சகோதர்களைப் பட்டியலிடுவது சிறப்புடைய பாடலாகும்.
- அசோகவனத்தில் சீதையைக் கண்டு திரும்பும் அனுமன் இராமனிடம் திரும்பி வந்து “கண்டனென் கற்பினுக் கணியை” என உரைக்கும் ஆற்றலும் அவர் “சொல்லின் செல்வன்” என அழைக்கப்படுவதும் சிறப்புடைய ஒன்றாகும்.
- “தாதுகு சோலை தோறும் சண்பகக் காடுதோறு
…………………………….. உலாய தன்றே” – கம்பர்
பூகம் – கமுகம் (பாக்குமரம்)
போது – மலர்
போதவிழ் – போது + அவிழ்
தாது – மகரந்தம்
பொய்கை – குளம்
- உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாயும் சரயு நதியின் வளம் இதில் கூறப்பட்டள்ளது
கம்ப இராமாயணம் – அயோத்திய காண்டம் – (ஏழாம் படலம் இது) – குகப்படலம் (அ) கங்கைப்படலம்
மேற்கோள்
10ஆம் வகுப்புகல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். “பொருந்து சொல்வமும் கல்வியும் பூத்தலால் |