சிவகங்கை மாவட்டத்தில் சிறுகூடல்பட்டியில் 24.06.1927-ல் பிறந்தார்
இவரின் பெற்றோர் சாத்தப்பன் – விசாலாட்சி
இவரின் இயற்பெயர் முத்தையா
கண்ணதாசன் கவிதைகள் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவர் திரைப்படப் பாடல்கள் நூல் வடிவம் பெற்றுள்ளளன.
ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, கல்லக்கடி, மகாகாவியம், ஏசுகாவியம் முதலியன அவர் படைத்த நெடுங்கவிதைகள்
இராசதண்டனை என்பது கம்பர் – அம்பிகாபதி வரலாற்றை வைத்து அவர் படைத்த இனிய நாடகம்.
ஆயிரம் தீவு, அங்கயற்கண்ணி, வேலங்குடித்திருவிழா முதலான பல புதினங்களையும் கண்ணதாசன் படைத்திருக்கிறார்.
அவர் எழுதிய இருபதுக்கு மேற்பட்ட புதினங்களில் “சேரமான் காதலி” சிறந்த வரலாற்றப் புதினமாகும். அதற்குச் சாகித்திய அகாதமியின் பரிசு கிடைத்துள்ளது.
கண்ணதாசன் தென்றல், முல்லை, கண்ணதாசன் கடிதம், தமிழ் மலர் முதலிய இதழ்களைத் தொடங்கி அவற்றின் ஆசிரியராக இருந்து சிறந்த இதழ் பணி ஆற்றியுள்ளார்.
கவிதையிலும், உரைநடையிலும், சொற்பொழிவிலும், திரைப்படத் துறையிலும் தமக்கென ஒரு புதிய வழியினை வகுத்துக் கொண்டு தலைநிமிர்ந்து நின்றவர் கண்ணதாசன். நான் நிரந்தமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
அண்ணாமலையரசர் நினைவுப் பரிசையும், சாகித்ய அகாடமி பரிசையும் பெற்றுள்ளார்.