Kavadisindhu – காவடிச்சிந்து பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

காவடிச்சிந்து – Kavadisindhu

TNPSC Tamil Notes - Kavadisindhu - காவடிச்சிந்து

Group 4 Exams – Details

நூல் காவடிச்சிந்து
ஆசிரியர் செனனிகுளம் அண்ணாமலையார்

நூற்குறிப்பு

  • சிந்து என்பது பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று உறுப்புகளைக் கொண்ட இசைப்பாடு
  • சரணத்தில் பல கண்ணிகள் இடம் பெறும்
  • கண்ணிகள் மட்டுமே “சிந்து” என்று கூறப்படும்
  • காவடிச்சிந்து நூல் கண்ணிகளால் அமைந்த “சிந்து” என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது ஆகும்.
  • பெரும்பாலும் காவடி எடுத்தக்கொண்டு போகும்போது பாடல் பாடுவதால் காவடிச்சிந்து எனப் பெயர் பெற்றது
  • காவடிச்சிந்து என்ற இலக்கிய வகையை முதன் முதலில் பாடியவர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்.
  • பெற்றோர் சென்னவர் – ஓவுஅம்மாள்
  • காலம் 1861 – 1890
  • தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியதால் “காவடிசிந்தின் தந்தை” எனப் போற்றப் பெற்றார்.
  • திருநெல்வேலிக்கு அருகே உள்ள கழுகுமலையில் எழுந்தருளியிருக்கும் முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூல்.
  • ஊற்றுமலைச் ஜமீன்தார் இருதாலய மருதப்பதேவர் கழுகுமலை முருகனுக்கு காவடியெடுத்த போது வழியில் பாடும் பொருட்டு இயற்றப்பட்ட நூல்
  • இந்நூலில் 24 பாடல்கள் உள்ளன.
  • பாரதி, பாரதியார், கண்ணதாசன் போன்றோர் காவடிச்சிந்து மெட்டில் பாடல்கள் புனைந்துள்ளனர்.
  • இராமாயணத் திருப்புகழ்க் காவடிச்சிந்து, அரிசந்திரன் திருப்புகழ்க் காவடிச்சிந்து, தேவடிச்சிந்து, பூவடிச்சிந்து போன்ற பிற நூல்களும் உள்ளன.
  • பூவடிச்சிந்து என்பது அசன்அலிப்புலவர் இயற்றிய இஸ்லாமிய நூல்
  • அண்ணாமலை ரெட்டியார் வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

மேற்கோள்

புள்ளிக் கலாபமயிற் பாகன் – சக்தி
புதல்வனான கன யோகன் – மலை
போலத்தான் திரண்ட
கோலப் பன்னிரண்டு வாகன்
நல்விவேகன்

வள்ளிக்கிசைந்த முருகேசன் – அண்ணா
மலைக்கவிராசன் மகிழ் நேசன் – என்றும்
வாழும் கழுகுமலை
வாவி வளம் சொல்லுவேன் மாதே
கேள் இப்போதே!

முக்கூடற்பள்ளு 

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment