பிறப்பால் வைணவர். கிறிஸ்துவ சமயத்தின் மீது கொண்ட பற்றால் சமயம் மாறிப் பின் உண்மை கிறித்தவராக வாழ்ந்தவர்.
வைணவ சமய நூல்களில் புலமையும் பயிற்சியும் கொண்டவர்.
இரட்சணிய யாத்திரகம் நூலை இயற்றியவர் ஏச்.எ. கிருஷ்ணப்பிள்ளை என்னும் புலவர் ஆவார்.
இவர் திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் ஊரினர். இவர் பெற்றோர் சங்கர நாராயணப்பிள்ளையும், தெய்வநாயகியம்மையும் ஆவார்.
ஹென்றி ஆல்பிரட் என்பதன் சுருக்கமே எச்.ஏ என்பது ஆகும்
இரட்சணிய யாத்திரகம், இரட்சணிய மனோகரம், போற்றித் திருவகவல் முதலிய பல நூல்களையும் படைத்துள்ளளார்.
இரட்சணிய யாத்திரகத்துள் இடையிடையே தேவாரம் என்னும் பெயரிலமைந்த இசைப்பாடல்கள் நெஞ்சுருகச் செய்யும் நீர்மையன
இப்புலவர்பிரானைக் கிறித்துவக் கம்பர் என்று பெரியோர் போற்றுகின்றனர்
நூற்குறிப்பு (இரட்சணிய யாத்திரகம்)
இரட்சணியம் என்பதற்கு ஆன்ம ஈடேற்றம் என்பது பொருளாம். ஆன்ம ஈடேற்றம் விரும்புவார் செல்லும் சிந்தனை யாத்திரை என்பதுவே இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள்.
ஜான் பனியன் என்பார் எழுதிய பீல்கிரிம்ஸ் பிராகிரஸ் என்ற நூலினையே இரட்சணிய யாத்திரகம் என இந்நூலாசிரியர் படைத்துள்ளார்.
இது 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம்.
இது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டது.