குலசேகர ஆழ்வார் – Kulasekara Alwar
Group 4 Exams – Details
பிறப்பு | திருவஞ்சைக்களம் (கேரள மாநிலம்) |
காலம் | கி.பி. 9ஆம் நூற்றாண்டு |
சிறப்புப்பெயர் | சேரர்கோன், குலசேகரப் பெருமாள் |
- திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபட்ட அடியவர் பன்னிருவர். இவர்கள் “ஆழ்வார்கள்” எனப்பட்டனர். அதாவது “பக்தியில் ஆழந்தவர்கள்” எனப் போற்றப் பெற்றனர்.
- இவர்கள் திருமாலைப் போற்றியப் பாடிய பாசுரங்கள் “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” எனத் தொகுக்கப் பெற்றுள்ளன. இதனைத் தொகுத்தவர் நாதமுனிகள் ஆவார்.
- இந்நூல் முதலாயிரம், திருஇயற்பா, பெரிய திருமொழி, திருவாய் மொழி நான்கு பகுதிகளைப் பெற்றுள்ளது.
- குலசேகர ஆழ்வார் பாடிய 105 பாக்கள் “பெருமாள் திருமொழி” என வழங்கப் பெறுகிறது.
ஆசிரியர் குறிப்பு
- இவரை குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்
- பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் குலசேகரப் பெருமாள், இவர் கேரள மாநிலத்துத் திருவஞ்சைக் களம் என்னும் ஊரில் அரசர் குடியில் பிறந்தவர்.
- இவர் தந்தையார் திடவிரதர். இவரைச் “சேரர்கோன்” எனவும் கூறுவர்.
- இவர் திருமாலின் பெருமைகளை உணர்ந்து அடியார் திருப்பணியில் தம்மை ஈடுபத்திக் கொண்டவர்.
- இவர் பாடிய பக்திப் பாக்கள் “பெருமாள் திருமொழி” என்னம் பகுதியில் இடம் பெற்றுள்ளன. பாடமாக அமைந்த பாடல் ஐந்தாம் திருமொழியன் முதற் பாடலாகும்.
- இப்பாடல் திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியுள்ள திருமாலின் மீது பாடப் பெற்றதாகும்.
- இவரது காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டு
Related Links
Group 4 Model Questions – Download