குறுந்தொகை
நூற்குறிப்பு
குறுந்தொகை
குறுமை + தொகை
ஆசிரியர் எண்ணிக்கை
205
பாடல் எண்ணிக்கை
401 + 1 (கடவுள் வாழ்த்து)
எல்லை
4-8
பொருள்
அகம்
தொகுத்தவர்
பூரிக்கோ
தொகுப்பித்தவர்
தெரியவில்லை
கடவுள் வாழ்த்து பாடியவர்
பாரதம் பாடிய பெருந்தேவனார்
தெய்வம்
முருகன்
குறைந்த அடியளவால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இதில் கடவுள் வாழத்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன
இந்நூலைத் தொகுத்தவர் . பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்கு கடவுள் வாழத்துப் பாடியுள்ளார். இப்பாடலாசிரியர் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை.
இந்நூல் வாயிலாகப் பண்டைத் தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு அறவுணர்வு முதலியவற்றை அறியலாம்.
மேற்கோள்கள் / பாடல்வரிகள்
9ஆம் வகுப்பு
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
– தேவகுலத்தார்
12 ஆம் வகுப்பு (Old)
யாரும் இல்லை;தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ?
தினைத்தாள்அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே
– கபிலர்
திணை குறிஞ்சி
துறை – வரைவு நீட்டிய தலைமகனுக்கு தோழி கூறியது
கபிலர் பற்றி கூறியவர்கள்:
வாய்மொழிக் கபிலன் – கூறியவர்கள் நக்கீரன்
நல்லிசைக் கபிலன் – பெருங்குன்றூர்க் கிழார்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் – இங்கீரனார்
புலன் அழுக்கற்ற அந்தணாளன், பொய்யா நாவிற் கபிலன் – மாறோக்கத்து நப்பசலையார்
9ஆம் வகுப்பு
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி அவர் சென்ற ஆறே.
(பாலை பாடிய பெருங்கடுங்கோ – 37வது பாடல்).
விருந்தை எதிர்கொள்ளும் தன்மை
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீ ரோ”
குறுந்தொகை – 118
பழந்தமிழர் வாழ்வினைக் காட்டும் காலக்கண்ணாடி இது.
நற்றிணை
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related