Manickavasagar – மாணிக்கவாசகர் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

மாணிக்கவாசகர் – Manickavasagar

TNPSC Tamil Notes - Manickavasagar - மாணிக்கவாசகர்

Group 4 Exams – Details

பிறப்பு திருவாதவூர்
காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டு
சிறப்பு பெயர் அழுது அடியடைந்த அன்பர்
நூல்கள் திருவாசகம், திருக்கோவையார்
  • சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர் மாணிக்கவாசகர்.
  • சைவ சமயக்குரவர்கள் – திருநாவுக்கரசர் (அப்பர்), திருஞான சம்பந்தர், சுந்தர், மாணிக்கவாசகர்
  • இவர் மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர்.
  • அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றியவர்.
  • பாண்டியனுக்காக குதிரை வாங்க சென்றபோது, திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப் பெற்றவர்.
  • திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப் பெற்றவர். அவ்விறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்க அழுது தொழுவர். இதனால் மாணிக்கவாசகரை, “அழுது அடியடைந்த அன்பர்” என்பர்.
  • திருவாசகமும், திருக்கோவையாரும் இவர் அருளியன இவர் எழுப்பிய கோவில், தற்பொழுது ஆவுடையார் கோவில் என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம்) உள்ளது.
  • காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டு
  • இறைவனின் பேரருளால் அமிழ்தத்தைப் பருகி உலகத்துச் சகாேதரர் அனைவரும் பெற, திருவாசகத்தைப் பாடி அருளினார்.
  • “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்னும் தொடர் நன்கு உணர்த்துவதாகும். இவரது போற்றிய திரு அகவல் சைவர்கள் வழிபாட்டுக்குரிய பட்டாக அமைந்துள்ள்ளது.
  • திருச்சதகப் பாடல்கள் உள்ளத்திற் தோய்ந்த வெளிப்பட அனுபவ வெளிப்பாடு ஆகும்.
  • திருவெம்பாவை, திருவம்மானை, திருப்பொற்கண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச் சாழல் திருத்தோள் நோக்கம் போல்வன வாய்மொழி இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
  • ஆண்டாள் பாடிய திருப்பாவையும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் பாவைப் பாடல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை கடல் கடந்த நாடுகளிலம் பரவியுள்ளன. குறிப்பாக சயாம் நாட்டில் திருவெம்பாவை பெரிதும் போற்றப்படுகிறது.
  • “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என இறைவன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, திருக்கோவையார் என்னும் அகத்துறை நூலை மாணிக்கவாசகர் இயற்றியருளினார்.
  • திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாந் திருமுறை ஆக்கப்பட்டுள்ளன.
  • திருக்கோவையார் ஒரு அகநூல். இதற்கு “திருச்சிற்றம்பலக் கோவை” என்ற பெயரும் உண்டு. இதனை “ஆரணம், ஏரணம், காமநூல், எழுத்து” என்றெல்லாம் சொல்லப்படுவது திருக்கோவை
  • ஜி.யு. போப் விரும்பி கற்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல் திருவாசகம்

 

சுந்தரர்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment