Manimekalai- மணிமேகலை பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

மணிமேகலை

TNPSC Tamil Notes - Manimehali - மணிமேகலை

நூற்குறிப்பு

 • இந்நூல் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகும்.
 • வெவ்வேறு நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஒரே கதைத் தொடர்புடையது எனவே இவை இரட்டை காப்பியங்கள் எனப்படுகின்றன.
 • கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை. அவளது துறவு வாழ்க்கை பற்றி கூறும் நூல் மணிமேகலை எனப்பெயர் பெற்றது. இந்நூலுக்கு மணிமேகலை துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.
 • இந்நூல் சொற்சுவையும், பொருள்சுவையும், இயற்கை வருணனைகளும் நிறைந்தது. பெளத்த சமயச்சார்புடையது.

ஆசிரியர் குறிப்பு

 • இந்நூலின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலை சாத்தனார். சாத்தன் என்பது இவரது இயற்பெயர். இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்தார்.
 • கூல வாணிகம் (கூலம்-தானியம்) புரிந்தார். இக்காரணங்களினால் இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலை சாத்தனார் என்று வழங்கப்பெற்றார்.
 • இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவராவர்.
 • தண்டமிழ் ஆசான், சாத்தானாரைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார். காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர். ஆசிரியப்பாவால் ஆனது.
 • அரசகுமாரன் மணிமேகலையை விரும்பி பின் தொடர மணிமேகலா தெய்வம் மூலம் மணிபல்லவத்தீவுக்கு வான்வழியே எடுத்துக் செல்லப்படுகிறாள். அங்கு தன் பழம் பிறப்பு உணர்கிறாள்.
மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் வழங்கிய மூன்று மந்திரங்கள்
 • பசியற்று இருக்க
 • விரும்பும் உருவம் எடுக்க
 • வான் வழிச்செல்ல
அமுத சுரபி பெற உதவியது தீவதிலகை
ஆதிரையிடம் முதன் முதலில் பிச்சைபெற அறிவுரை கூறியவர் அறவண அடிகள்
ஆதிரையிடம் முதன் முதலில் பெற அழைத்துச் சென்றவர் சாயசண்டிகை
முற்பிறப்பில் அமுதசுரப்பிக்கு உரியவன் ஆபுத்திரன்
ஆபுத்திரனுக்கு அமுதசுரப்பியை வழங்கியவர் சிந்தாதேவி
சிலம்பும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்
தமிழில் தோன்றிய முதல் பெளத்த மதக் காப்பியம் மணிமேகலை
பிற மதங்கள் பழிக்கும் நூல் மணிமேகலை
 • துறவுக்குமும், சமயப்பூசலுக்கும் வித்திட்ட முதல் நூல், விழாவறைக்கால முதல் பவுத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை வரை 30 காதைகள் உள்ளன. காண்டப்பிரிவுகள் கிடையாது.
 • ஆசிரியப்பாவால் ஆனது.
 • ஆசிரியர் – மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
 • பிறந்த ஊர் – திருச்சி, வாழ்ந்த ஊர் – மதுரை.
 • இவர் கூறவே சிலம்பை இயற்றினார் இளங்கோவடிகள்
 • தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகளால் பாராட்டப்பட்டார்
 • இதன் வேறு பெயர் மணிமேலைத் துறவு, பசிப்பிணிகாப்பியம், முதல்சமய காப்பியம், அறக்காப்பியம், சீர்திருத்த காப்பியம், குறிக்கோள் காப்பயிம், பசுபோற்றும் காப்பியம்

பொருத்துக

ஆயம் தோழியர் கூட்டம்
வெகுளல் சினைத்தல்
புரைதீர் குற்றம் நீங்கிய
குறளை புறங்கூறல்
வேட்கை விருப்பம்
அருந்தவர் அறவண அடிகள்
 • சொல்லில் ஏற்படும் குற்றங்கள் 4 – பொய், கடுஞ்சொல், குறளைஇ பயனில்
 • மனதில் ஏற்படும் குற்றங்கள் 3 – பேரவா, கடுஞ்சினம் கொள்ளுதல், தெளிவில்லா அறிவு (வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி)
 • உடலில் ஏற்படும் குற்றங்கள் 3 – கொலை,களவு, காமம்
 • அறுவை உயிர்கள் – மக்கள், தேவர், பிரமர், நாகர், விலங்குத் தொகுதி, பேய்
 • “முயலுக்கு கொம்பு உண்டு என்று கூறுவது பொய்” மணிமேகலை
இயல்பீராறு இயல்பு + இரண்டு + ஆறு
வெஃகல் விரும்புதல்
சீபம் ஒழுக்கம்
கண்ணகியின் தோழி தேவந்தி
மாதவியின் தோழி வயந்தமாலை
மணிமேகலையின் தோழி சுதமதி

இந்திர விழா

 • முதன் முதலில் இந்திரவிழா எடுத்தவன் தூங்கெயில் எறிந்த தொடி தோட் செம்பியான்
 • இந்திர விழா 28நாட்கள் நடைபெறும்
 • மழை வேண்டி எடுக்கப்படும் விழா இந்திரா விழா
 • பூம்புகாரில் இந்திர விழா நடைபெற்றதாக சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டு என்ற நூல்களும் கூறுகின்றன.

மேற்கோள்

“தேவரும் மக்களும் பிரமருமாகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பபயன் உண்குவா”

“கொலையே களவே காமந் தீ விழைவு”

“பொய்யே குறளே கடுஞ்சொல் பயனில்
சொல்லெனச் சொல்லில் தோன்றுவ நான்கும்”

“வெஃகல் வெகுளல் வொல்லாக் காட்சி”

“புனையா ஓவியம் புறம் போந்தன்ன”  (புனையா ஓவியங்கள்)

சீவக சிந்தாமணி

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment