Manonmaniam – மனோன்மணியம்
Group 4 Exams – Details
நூல் | மனோன்மணியம் |
ஆசிரியர் | பெ.சுந்தரம்பிள்ளை |
பாடல்களின் எண்ணிக்கை | 5 அங்கங்கள், 20 களங்கள் |
நூற்குறிப்பு
- நூல் ஆசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை
- வாழ்க்கை 1855 முதல் 1897 வரை
- தத்துவப் பேராசிரியர், ராவ் பகதூர் பட்டம் பெற்றவர்.
- மனோன்மணியம் என்ற கவிதை நாடகத்தை எழுதியவர்
- ஆங்கிலத்தில் லிட்டன் பிரபு எழுதிய (The Secret Way) இரகசிய வழி என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது மனோன்மணியம்.
- மனோன்மணியம் ஆசிரியப்பாவால் ஆனது.
- தமிழில் இலக்கியத் தரம் வாய்ந்த நாடகம் இல்லாத குறையை போக்கியது மனோன்மணியம்
- “நீராரும் கடலுடுத்த” எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்ற மனோன்மணியம்
- தமிழ்த்தாய் வாழ்த்த பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா என்ற பாவில் இயற்றப்பட்டது.
- தமிழ்தாய் வாழ்வத்திற்கு இசை அமைத்தவர் மெல்லிசை மன்னன் எம்.எஸ். விஸ்வநாதன்.
- தமிழைத் தெய்வமாகப் போற்றிய நூல்
- தமிழ்த்தாய்க்குக் கோயில் உள்ள ஊர் காரைக்குடி
- ஜீவகன், மனோன்மணி, குடிலன், புருசோத்தமன், வாணி, நடராசன், சுந்தர முனிவர், கருணாகரர் நிஷ்டாபரர் போன்ற பாத்திரங்கள் இடம் பெறும் நூல்.
- பாண்டிய மன்னன் ஜீவகன்.
- ஜீவகனின் குரு சுந்தர முனிவர்
- ஜீவகனின் அமைச்சர் குடிலன்
- மனோன்மணியை மணந்தவன் சேர மன்னன் புருஷோத்தமன்
- மனோன்மணியின் தோழி வாணி
- வாணியின் காதலன் நடராசன்
- சுந்தர முனிவரின் சீடர்கள் கருணாகர், நிஷ்டாபரர்
- சிவகாமி சரிதம் என்ற கிளைக்கதை இடம் பெற்ற நூல் மனோன்மணியம்
- நாடகத்துள் நாடகமாகத் திகழ்வது சிவகாமி சரிதம்
- தத்துவப் பொருள் கொண்டது சிவகாமி சரிதம்
- சிவகாமி சபதம் என்பது கல்கி எழுதிய வரலாற்று நாவல்
நூல்கள்
- திருஞான சம்பந்தர் கால நிர்ணயம்
- நூற்றொகை விளக்கம்
- சேரநாட்டுப் பழங்கால அரசர்கள்
- ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டவை : திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி
Related Links
Group 4 Model Questions – Download