Maraimalai Adigal – மறைமலை அடிகள் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

 மறைமலை அடிகள் – Maraimalai Adigal

TNPSC Tamil Notes - Maraimalai Adigal - மறைமலை அடிகள்

Group 4 Exams – Details

அறிஞர் மறைமலை அடிகள்
இயற்பெயர் வேதாச்சலம்
பெற்றோர் சொக்கநாதபிள்ளை – சின்னம்மாள்
காலம்  1876 – 19750
  • தமிழகம் உரிமை இழந்து ஆங்கில மோகத்தில் ஆழ்ந்திருந்த காலத்தில் அருந்தமிழை போற்றி வளர்த்த அறிஞருள் ஒருவர் பதிரிமாற்கலைஞர்.
  • இவரது காலம் 1876 – 15.9.1950
  • வடமொழியையும், ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர் தனிச் செம்மொழியாம் தமிழை வடமொழி கலப்பின்றித் தூய நடையில் எழுதி பிறரையும் ஊக்குவித்தவர்.
  • சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர்.
  • பரிதிமாற் கலைஞரும், மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள்.
  • இவரின் இயற்பெயர் வேதாசலம். திருக்கழுகுன்றத்தில் பிறந்தவர்
  • இவரின் பெற்றோர் சொக்கநாதர் –  சின்னம்மையார்
  • தனித்தமிழ் பற்று காரணமாக வேதாச்சலம் என்ற தன்பெயரை 1916-ல் மறைமலை (வேதம் – மறை, அசலம் – மலை) என்று மாற்றிக் கொண்டார்.
  • மறைமலையடிகள் நாகையில் வெசுலியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையின் இறப்பின் காரணமாக பள்ளிபடிப்பை அவரால் தொடர இயலவில்லை.
  • பின் நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார்.
  • சைவசித்தாந்த சண்டமாருதம் என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தரநாயக்கரிடம் சைவ சித்தாந்தம் கற்றார். சென்னைக்கு வந்த பின்னர் கிறிஸ்துவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாஸ்திரியாருடன் தமிழாசிரியராக பணிபுரிந்தார்.
  • 1905-ல் சைவ சிந்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பை தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையயும் ஏற்றார்
  • தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்தார்.
  • முல்லைபாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி, திருக்குறள் ஆராய்ச்சி, சிவஞானபோத ஆராய்ச்சி, மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், தமிழர் மதம், திருவாசக விரிவுரை முதலான நூல்களை எழுதியுள்ளார்.
  • கோகிலாம்பாள் கடிதங்கள், நாகநாட்டரசி  முதலான புதினங்கள் சிறப்பு மிக்கவை
  • தான் நடத்திய “ஞானசாகரம்” என்னும் இதழை “அறிவுக்கடல் என மாற்றியமைத்தார்.

இவரின் நூல்கள்

  • பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்
  • மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை
  • மனித வசியம் அல்ல மனக்கவர்ச்சி (1927)
  • யோக நித்திரை அறிதுயல் (1922)
  • தொலைவில் உணர்தல் (1935)
  • மரணத்தின் பின் மனிதர் நிலை (1911)
  • சாகுந்தல நாடகம் (சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்த்தது) (1907)
  • சாகுந்தல நாடக ஆசிரியர் (19340
  • ஞானசாகரம் மாதிகை (1902)
  • முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை (1903)
  • பட்டினப்பலை ஆராய்ச்சியுரை (1905)
  • சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
  • முதற்குறள் வாத நிராகரணம் (18980
  • திருக்குறள் ஆராய்ச்சி (1951)
  • அம்பிகாவதி அமராவதி (நாடகம்)
  • கோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம்)
  • குமுதலவல்லி அல்லது நாகநாட்டரசி (புதினம்)
  • மாணிக்கவாசகர் வரலாறு (1952)
  • சோமசுந்தர காஞ்சியாக்கம் (1901)
  • சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
  • திருவாச விரிவுரை (1940)
  • துகளறு போதம் உரை (1898)
  • வேதாந்த மத விசாரம் (1890)

 

பரிமாற் கலைஞர்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment