பாவேந்தர் விருது, குழந்தை இலக்கிய மாமணி, கவிவேந்தர், முத்தமிழ்க்கவிஞர்
ஆசிரியர் குறிப்பு
“ஆலந்தூர் கோ.மோகனரங்கன்” அவர்கள் தமிழ்ப்பா புனைவதில் முத்திரை பதித்த “பெரும் பாவலர்” ஆவார்.
கிளை நூலகராகப் பணிபுரிந்தபடியே புகழ் பெற்ற பாக்களையும், இசைப்பாக்களையும் எழுதியவர்.
“தமிழ்க் கவிதைகளில் சந்த அமைப்பு, வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் சிறப்பாய்வு” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
ஆலந்தூர் கோ.மோகனரங்கள் அவர்கள் 01.06.1924-ல் சென்னையில் ஆலந்தூரில் பிறந்தவர்.
பெற்றோர் கோ.மீனாம்பாள் – மா.கோபால்
ஆலந்தூர் கோ.மோகனரங்கள் அவர்கள் சென்னைத் தியாகராயநகர் உயிர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் படிக்கும் பொழுது “புதிய பாதை” என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தியவர்.
ஆலந்தூரில் “கவிதை வட்டம்” என்னும் இலக்கிய அமைப்பை ஏற்படுத்தித் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கவிஞர்கள் வந்து கலந்து கொள்ளும் கவியரங்குகளை நடத்தியவர்.
திரு.வி.க., கா.சு.பிள்ளை, மயிலை சீனி வேங்கடசாமி, பன்மொழிப்புலவர், கா.அப்பாத்துரையார் உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களை மறுபதிப்பு செய்த பெருமைக்குரியவர்.
தமிழக அரசின் “பாவேந்தர் விருது, குழந்தை இலக்கிய மாமணி, கவிவேந்தர், முத்தமிழ்க்கவிஞர்” உள்ளிட்ட பட்டங்களையும், விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர்.
தில்லியில் உள்ள “தேசிய புத்தக நிறுவனத்தார்” இவர் தம் கவிதைகளை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்துள்ளனர். “ஞான பீட நிறுவனத்தார்” இவர் தம் கவிதைகள இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டள்ளனர்.
ஆலந்தூர் கா,மோகனரங்கன் அவர்களின் பாடல்கள் பள்ளிப்பாட நூல்களில் இடம் பெற்றுள்ளன.