அறிஞர் அண்ணா அவர்களால் தமிழகத்தின் அன்னிபெசன்ட் எனப் புகழப்பட்டவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள்.
இவர் 1883-ல் பிறந்தார்.
அவர் தேவதாசி முறையை எதிர்த்து பேராடினார். 1917-ல் தனது முதல் போராட்டத்தை துவக்கினார்.
அம்மையார் காந்தியத்தின் மீது மிகுந்த ஈடுபாடும் விடுதலை வேட்கையும் கொண்டிருந்தார்.
பெரியார், திரு.வி.க., வரதராசுலு, தருமாம்பாள், நீலாம்பிகை, மலர்முகத்தம்மையார், தாமரைக் கண்ணியம்மையார் முதலானோர் மூவலூர் அம்மையாரோடு இணைந்து தேவதாசி முறையை ஒளிப்பதற்காக பாட்டுபட்டனர். அம்மையார் சுயமரியாதை திருமணங்களை ஆதரித்தார்.
இவர் 1938-ம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போரில் பெரிதும் பங்காற்றினார். அம்மையார் பெண் உரிமைக்காக பாடுபட்ட விடிவெள்ளியாக திகழ்ந்தார். தமது 80 வயதில் 27.06.1962-ம் ஆண்டு இல்வுலக வாழ்வை நீத்தார். திருமண உதவி திட்டத்தை அம்மையார் பெயரில் தமிழக அரசு 1989 முதல் வழங்கி வருகிறது.