Mu.Metha – மு.மேத்தா பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

மு.மேத்தா – Mu.Metha

TNPSC Tamil Notes - Mu.Metha - மு.மேத்தா

Group 4 Exams – Details

புலவர் மு.மேத்தா
பிறப்பு பெரியகுளம் (1945)
விருது சாகித்திய அகாதெமி விருது (ஆகாயத்துக்கு அடுத்த வீடு)

ஆசிரியர் குறிப்பு

  • மு.மேத்தா (முகமது மேத்தா) பிறப்பு செப்டம்பர் 1945 பெரியகுளத்தில் பிறந்தார்.
  • இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
  • புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவர்.
  • உவமை மற்றும் உருவகங்களில் பழமையும், புதுமையையும் இணைத்த மு.மேத்தா வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்நதவர். இவரைப் பின்பற்றி இளைஞர்கள் பலர் கவிதை எழுத ஆர்வம் கொண்டனர்.
  • காதல் சோகமும், தமிழ்த் தாகமும், இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத்தொனியில் அமைந்த “தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி” என்ற கவிதை மு.மேத்தாவுக்க புகழ் தேடி தந்த கவிதை ஆகும்.
  • “வானம்பாடி”  என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்கள் “மு.மேத்தா”  முன்னணியில் நிற்பவர். “நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்”. இறப்பினில் கண் விழிப்பேன், மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.
  • மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு.மேத்தா அத்துறைகளில் 15-ற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.
  • அவருடைய நூல்களுள் ஒன்றான “ஊர்வலம்” தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும்.
  • இவரது “சோழ நிலா” என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போ்ட்டியில் முதல் பரிசு பெற்றது

இவரின் கவிதைத் தொகுப்புகள்

கண்ணீர் பூக்கள் ஊர்வலம்
திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் இதயத்தில் நாற்காலி
வெளிச்சம் வெளியே இல்லை மனச்சிறகு
அவர்கள் வருகிறார்கள் காத்திருந்த காற்று
நந்தவன நாட்கள் கம்பன் கவியரங்கத்தில்

இவரின் மொழிபெயர்ப்பு கவிதைகள்

  • சச்சிதானந்தன் கவிதைகள் (1998)
  • உஜ்ஜியினி (ஓ.என்.வி.குரூப் – 2001)
  • கவிதை மீண்டம் வரும் (சச்சிதானந்தன் – 2001)
  • காலத்தை உறங்க விடமாட்டேன் (என்.கோபி – 2010)
  • கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள் (2012)


சிற்பி

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment