மு.வ.கடிதம் – Mu.Va.Kaditham
Group 4 Exams – Details
மு.வரதராசனார் தம்பிக்கு எழுதிய கடிதம்
- தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப்படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு. ஆட்சிமொழியென்றால் சட்டசபை முதல் நீதிமனறம் வரையில் தமிழ் வழங்க வேண்டும். கல்வி மொழி என்றால் எவ்வகை கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்க வேண்டும். குறைகள் பல இருக்கலாம்.
- குறைகளுக்கு தயங்காமல் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் ஆக்க வேண்டும் என்ற உணர்ந்திடு. கடிதம், பணவிடை, விளம்பரப்பலகை, விற்பனைச்சீட்டு முதலிய எல்லாம் தமிழலேயே எழுதுக. சாதிவேறுபாடுகளை மறக்க கற்றுக் கொள். முடியாவிட்டால் புறக்கணிக்க கற்றுக் கொள். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற செம்மொழியைப் போற்று.
- உன் மொழியையும் நாட்டையும் போற்றுவதற்காக மற்றவர்களின் மொழியையும் நாட்டையும் தூற்றாதே, பழிக்காதே, வெறுக்காதே, தமிழர்களிடையே ஒற்றுமை வளர்க்கும் சிந்தை, சொல் செயல்களையே போற்று. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் நல்ல நிலை வரவேண்டும் என்று ஆர்வம் கொள். உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியத என்ற உணர். உன் உயர்வை விட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்ற உணர்.
- தொண்டுக்கு முந்து தலைமைக்கு பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும். இந்த நாட்டில் சொன்னபடி செய்ய ஆள் இல்லை. ஆனால் கண்டபடி சொல்ல ஆள் ஏராளம். ஒவ்வொருவரும் ஆணை இடுவதற்கு விரும்புகிறார். “அடக்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது” என்கிறார் விவேகானந்தர். ஆகையால் கட்டுப்படுதல், கீழ்படிதல், தொண்டு செய்தல் இவற்றை பெருமையாக கொள்.