முக்கூடற்பள்ளு – Mukkudarpallu
Group 4 Exams – Details
நூல் | முக்கூடற்பள்ளு |
நூலின் காலம் | கி.பி. 17-ம் நூற்றாண்டு |
பாடல் இசை | சந்தஇசை |
நூற்குறிப்பு
- பள்ளமான நிலத்தில் (மருதம்) உழவுத் தொழில் செய்து வரும் பள்ளர் பற்றிய நூல்
- இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- சிலர் என்னயினாப்புலவர் என்பர்
- இந்நூலின் காலம் 17ஆம் நூற்றாண்டு என்பர்
- பாத்திரங்கள் நாடகத் தன்மையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
- ஆசிரியர் கூற்றாகத் தரவு கொச்சகக் கலிப்பா நூலின் இடையிடையே அமைந்துள்ளன.
- உழவர் வாழ்வைச் சித்தரிக்கும் இலக்கியம் பள்ள
- சேரிமொழியும் – செந்தமிழ் வழக்கும் கலந்த நூல் (குறவஞ்சி போன்று)
- ஏசல் இடம் பெறும் இலக்கியம்
- சமயங்களைத் தாக்கவது போன்ற சமயக் கருத்துகளையும், கதைகளையும் சுவையாகக் கூறுவது.
- உழத்திப்பட்ட என்றவேறு பெயரும் உண்டு
- சந்த இசை மிகுந்த நூல் பள்ளு
- கோலாட்டமாகப் பாடப்பட்டது பள்ளு என்பார் டி.கே.சி
- முதற் பள்ளு நூல் முக்கூடற்பள்ளு, கமலை ஞான பிரகாசர் எழுதிய திருவாரூர் பள்ளு முதற்பள்ளு என்பார் ந.வீ.செயராமன்
- தொல்காப்பியர் குறிப்பிடம் 8வகை பிரிவுகளில் ஒன்றான புலன் என்னும் இலக்கிய “வகை பள்ளு வகை” இலக்கியத்திற்கு பொருந்தும்.
- முக்கூடற்பள்ளுவின் பள்ளன் பெயர் அழகர் குடும்பன்
- மூத்தப்பள்ளி வைணவம், இவள் முக்கூடற்பள்ளி
- இளையபள்ளி சைவம், இவள் மருதூர்ப்பள்ளி
- தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு மூன்றும் கூடும் இடம் முக்கூடல். இன்று சீவலபேரி என்ற பெயர் வழங்கிறது
- பொருநை ஆற்றங்கரையில் அமைந்தது முக்கூடல் என்றும் சிலர் கூறுவர்.
- நெடுமூக்கன் முத்துச்சம்பா, குதிரை வாலி போன்ற 150 வகையான நெல் வகைகளைப் பள்ளு நூல்கள் கூறுகின்றன.
- முக்கூடற்பள்ளு என்ற நூலை “முக்கூடல் நாடகம்” என்ற பெயரில் நாடகமாக்கியவர் சின்னத்தம்பி வேளாளர்
- பேதுருப் புலவர் இயற்றிய ஞானப்பள்ளு கிறித்துவச் சமயம் சார்ந்தது.
- இஸ்லாமியர் பாடாத இலக்கியம் பள்ளு
காயக் கண்டது சூரய காந்தி;
கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம்;
மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்