முத்தொள்ளாயிரம் – Muthollayiram
Group 4 Exams – Details
நூல் | முத்தொள்ளாயிரம் |
பாவகை | வெண்பா |
பாடல்களின் எண்ணிக்கை | 900 |
ஆசிரியர் | —— |
நூற்குறிப்பு
- சங்க இலக்கியத்திற்குப் பின்னர் தோன்றிய நூல்.
- தனிப்பாடல்களின் தொகுதி, வெண்பாக்களால் ஆனது.
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.
- அகமும், புறமும் இணைந்த நூல்; எனினும் அகப்பொருளுக்கே முதன்மை தருகிறது.
- சிலப்பதிகாரத்திற்கு முன்பே மூவேந்தர்களையும் பாடிய நூல்.
- சேரநாட்டை அச்சமில்லாத நாடாகவும், சேரநாட்டை ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும், பாண்டிய நாட்டை முத்துரை நாடாகவும் காட்டுகிறது.
- மூன்று + தொள்ளாயிரம் என்று பிரித்து ஒவ்வொரு மன்னர்களும் 900 பாடல்கள் வீதம் மொத்தம் (900 x 3 = 2700) பாடல்கள் கொண்ட நூலாக இருந்திருக்க வேண்டும் என்பர்.
- மூன்று + தொள்ளாயிரம் என்பதற்கு மூன்று மன்னர்களின் மீது; ஆளுக்கு 300 பாடல் வீதம் பாடப்பட்ட தொள்ளாயிரம் பாடல்களை உடையது என்றும் பொருள் கூறுகின்றனர்.
- புறத்திரட்டு என்ற புறநூல் தொகுப்பின் மூலம் 108 பாடல்கள் கிடைத்தன.
- உரைகளின் மூலம் 22 பாடல்கள் கிடைத்தன
- கிடைத்துள்ள முத்தெள்ளாயிரப் பாடல்களில் பாண்டியனுக்கு 61, சோழனுக்கு 46, சேரனுக்கு 23 பாடல்கள் கிடைத்துள்ளன.
- இதன் புறப்பாடல்கள் சங்க இலக்கியம் போல் இயல்பு நவிற்சியாகக் கூறாமால் உயர்வு நவிற்சியாகவே கூறுகிறது.
- சங்க இலக்கியத்தில் ஆண்பால் கைக்கிளைப் பாடல்கள் சில உள்ளன; பெண்பால் கைக்கிளைப் பாடல் கிடையாது.
- முத்தொள்ளாயிரத்தில் பெண்பாற் கைக்கிளைப் பாடல்கள் பல உள்ளன.
- சங்க இலக்கியத் தலைவி தன் காதலைத் தன் தோழியிடமே வெளிப்படையாக கூறத் தயங்குவாள்.
- முத்தொள்ளாயிரத்த் தலைவி தன் காதல் துன்பத்தைப் பலர் முன்பு கூறுகின்றாள்.
- மன்னனைக் கண்டால் தன் மகள் அவனைக் காதலிப்பாள் என்று கதவடைக்கும் தாயும் முத்தொள்ளாயிரத்தில் உண்டு.
- சங்க இலக்கிய அகமரபில் பெயர் சுட்டும் மரபு இல்லை. முத்தொள்ளாயிரத்தில் மன்னன் என்ற தகுதியையும் சேரன், சோழன், பாண்டியன் என குலம் கட்டப்படுகின்றன. எனினும் தனிப்பட்ட ஒரு மன்னனின் பெயரைச் சுட்டவில்லை.
- முத்தொள்ளாயிரம் என்ற நூல் குறித்துத் தன் உரையில் குறிப்பிடும் உரையாசிரியர், பேராசிரியர்.
- சங்க இலக்தியத்திற்குப் பின்பும், அறநூல்களுக்கு முன்பும் முத்தொள்ளாயிரம் தோன்றியிருக்க வேண்டும்.
- தொள்ளாயிரம் என்பது இலக்கிய வகைபோலும்.
- 11ஆம் நூற்றாண்டில் வச்சத் தொள்ளாயிரம் தோன்றியது.
- 12ஆம் நூற்றாண்டில் அரும்பைத் தொள்ளாயிரம் என்ற நூல் தோன்றியது.
மேற்கோள்
பல்யானை மன்னீர்! படுதிறை தந்துஉய்மின்
மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின் வாள் இதழ் வாடாத வானோரும் வானவன் வில்எழுதி வாழ்வார் விசும்பு – சேரன் பற்றியது |
சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி
ஈர்ந்திட்டு உயர்துலைதான் ஏறினான் – நேர்ந்த கொடை வீரமோ மெய்ந்நிறை குறையா வன்கண் படைவீரமோ சென்னி மாண்பு – சோழன் பற்றியது |
மருப்புஊசி யாக மறம்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்பு ஓலையாக – திருத்தக்க வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே மொய்இலைவேல் மாறன் களிறு – பாண்டியன் பற்றியது |