முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் – Muthukumarasamy Pillaitamil
Group 4 Exams – Details
நூல் | முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் |
ஆசிரியர் | குமரகுருபரர் |
ஆசிரியர் காலம் | 17-ம் நூற்றாண்டு |
பாடல்கள் எண்ணிக்கை | 10 பருவங்கள், 100 பாடல்கள் |
நூற்குறிப்பு
- சிற்றிலக்கிய வகையான பிள்ளைத்தமிழ் நூல்களுள் ஒன்று
- ஆசிரியர் குமரகுருபரர்
- 17-ம் நூற்றாண்டில் ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர்
- ஐந்து வயது வரை ஊமையாக இருந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பேசுந்திறம் பெற்றவர்
- முருகன் அருள் பெற்றவுடன் பாடிய நூல் கந்தர் கலிவெண்பா.
- முருகப் பெருமானால் “குருபரன்” என்று அழைக்கப் பெற்றவர்
- தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளை கற்றவர்.
- தமிழையும், தெய்வத்தையும் இரு கண்களாக கருதியவர் குமரகுருபரர்
- காசியில் இறைவனடி சேர்ந்தார்
- புள்ளிருக்கு வேளூரில் உள்ள முருகனின் பெயர் முத்துக்குமாரன். அவர் மீது பாடப்பட்டது. ஆதலால் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் எனப்பெயர் பெற்றது.
- மாசிலாமணி தேசிகரிம் மெய்ப்பொருள் பெறவந்த குமரகுருபரர் தில்லை செல்லும் வழியில் புள்ளிருக்கு வேளூரில் தங்கியபோது, முருகன் தன்னைப் பாடப்பணித்த போது பாடியது.
- இதற்கு முத்தையன் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளூர் சேனாதிபதி பெருமான் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளூர் குமாரதேவர் பிள்ளைத்தமிழ் என்ற பெயர்களும் வழங்கின
- பருவத்திற்குப் பத்துப் பாடல்களாக நூறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
- இருபாலருக்கும் பாெதுவான பருவங்கள் : காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.
- ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) : சிற்றில், சிறுபறை, சிறுதேர்
- பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) : கழங்கு, அம்மானை, ஊசல்
மேற்கோள்
உலகு குளிர எமது மதியில் ஒழுகும் “அந்த கிரணமே” – என முருகனைப் போற்றுகிறார்! |