முதுமொழிக்காஞ்சி
- நிலையாமையை உணர்த்தும். உலகியல் அனுபவம் உணர்த்தலான இப்பெயர் உடைத்து பப்பத்துப் பாடல்களையுடைய பத்து பிரிவுகள் உள, ஒவ்வொரு பத்தும் “ஆர்கலியுலகத்து மக்கட்கெல்லாம்” என ஒரே மாதிரி தொடங்குகின்றன.
- ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்…. சிறுகாமை சிறந்ததன்று
நூற்குறிப்பு
- முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.
- பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான இந்நூல் உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது.
- இந்நூல் அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது.
- இதில் பத்து அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொர் அதிகாரத்திலும் பத்து செய்யுள்கள் உள்ளன.
- இந்நூல் நூறு பாடல்களால் ஆனது.
- காஞ்சி என்ற புறத்திணையால் பெயர் பெற்ற நூல்
நூல் பயன்
- முதுமொழிக்காஞ்சி கற்போரின் குற்றங்களை நீக்கி அறம், பொருள், இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறிவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும்.
பாவகை
- இந்நூல் குறள் தாழிசையில் பத்துப் பத்துச் செய்யுட்கள் அடங்கிய பத்து பகுதிகளைக் கொண்டது.
- அதே போல் ஒவ்வொரு பத்தும் ஆர்கலி உலகத்து எனத் தொடங்குகிறது.
ஆசிரியர் குறிப்பு
- பெயர் – மதுரைக் கூடலூர்கிழார்.
- பிறந்த ஊர் – கூடலூர்
- சிறப்பு – இவரது பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கொள்களாகக் கையாண்டுள்ளார்கள்.
- காலம் – சங்க காலத்திற்கப் பின் வாழ்ந்தவர்
சிறந்த தொடர்கள்
- ஈரம் இல்லாதது கிளை நட்பன்று
- நாணில் வாழக்கை பசித்தலின் துவ்வாது
- கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
- நசையிற் சிறந்த நல்குர வில்லை
இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்
அறியாத தேயத்து ஆசாரம் பழியார் குலன உடைமையின் கற்புச் சிறந்தன்று இளமையில் சிறந்தன்று மெய்ப்பிணி இன்மை மேற்கோள்கள் |