Naanmanikadigai – நான்மணிக்கடிகை பற்றிய செய்தி குறிப்புகள்

 நான்மணிக்கடிகை 

TNPSC Tamil Notes - Naanmanikadigai - நான்மணிக்கடிகை

நூற்குறிப்பு

  • நான்மணிக்கடிகை பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
  • கடிகை என்றால் அணிகலன் (நகை) ஆபரணம், கட்டுவடம்.
  • நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
  • ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன.

ஆசிரியர் குறிப்பு

  • நூலாசிரியர் – விளம்பிநாகனார்
  • “விளம்பி” என்பது ஊர்ப்பெயர்
  • “நாகனார்” என்பது புலவரின் இயற்பெயர்

பா வகை

  • நான்மணிக்கடிகை 104 வெண்பாக்களால் ஆன நூலாகும்.

சிறந்த தொடர்கள்

  • “அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்

பொருளிற் பிறந்து விடும்

  • “வெல்வது வேண்டின் வெகுளி விடல்”
  • அவைக்குப் பாழ் மூத்தோரின்மை
  • “ஈன்றாளின் என்னக் கடவுளம் இல்”
  • “நிலத்துக்கு அணி என்ப, நெல்லும் கரும்பும்

    குளத்துக்கு அணி என்ப, தாமரை; பெண்மை

    நலத்துக்கு அணி என்ப, நாணம்; தனக்கு அணி

    தான்செல் உலகத்து அறம்.”

6th Tamil (Old Books)

மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்-

தனக்குத் தகை சால் புதல்வர்; மனக்கு இனிய

காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்,

ஓதின், புகழ் சால் உணர்வு.

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment