Nadaga Kalai – நாடகக்கலை பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

நாடகக்கலை – Nadaga Kalai

TNPSC Tamil Notes - Nadaga Kalai - நாடகக்கலை

Group 4 Exams – Details

தமிழில் நாடகக்கலை

 • கூத்தக்கலை என்ற வேறு பெயரும் உண்டு.
 • கூத்து என்பது நாட்டியம், நாடகம் என்ற இரண்டையும் உள்ளடக்கிய பொதுச்சொல்
 • தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம்
 • போலச் செய்தல் என்ற பண்பின் அடிப்படையில் தோன்றியது நாடகம்.
 • முதலில் மரப்பாவை கூத்து நடத்தப்பட்டது
 • மரப்பாவையிலிருந்து கை, கால்களை அசைக்கும் பொம்மலாட்டம் உருப்பெற்றது.
 • மரத்திற்கு பதில் தேலால் செய்த பொம்மைகளை இயக்குவது எளிதாக இருந்தது. அதனால் மரப்பாவைக் கூத்து தோற்பாவைக் கூத்தானது.
 • தோலின் நிழலைத் திரையில் விழச்செய்யும் நிழற்பாவைக் கூத்தம் தோற்பாவை கூத்திலிருந்து வந்ததே ஆகும்.
 • மரம், தோல் என உயிரற்ற பொருளை வைத்து நடத்திய கூத்து பின் உயிருள்ள மனிதர்களையே வேடம் புனையச் செய்து நடிக்க வைத்தது. அதுவே நாட்டியமாக, நாடகமாக வளர்ச்சி கண்டது.
 • முத்தமிழுள் ஒன்று என் சிறப்பினைப் பெற்றது.
 • நாடு + அகம் – நாட்டின் முக்கால நிகழ்வுகளையும் தன்னுள் கொண்டது என்பத பொருள். அகம் நாடும் கலை என்றும் கூறுவர்.
 • முத்தமிழுள் இயலையும், இசையையும் தன்னுள் அடக்கி கொண்டுள்ள நாடகத் தமிழ்.
 • இசைக்கலை, ஓவியக்கலை, ஒப்பனைக்கலை எனப் பல கலைகளின் சங்கமாக இருப்பது நாடகக்கலை.
 • கண்ணுக்கும், செவிக்கும், கருத்துக்கும் ஒரே நேரத்தில் இன்பம் தருவதால் மக்களிடையே மிகுந்த செல்வாக்கை பெற்றது (இதன் அடுத்தகட்ட வளர்ச்சியே திரைப்படம்)

நாடக வரலாறு

 • நாடகம் தோன்றிய காலம் குறித்த தெளிவாக அறிந்த கொள்ள முடியவில்லை
 • வேட்டையாடிப் பிழைத்த போது பெரும் வேட்டையில் வெற்றி பெற்ற மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பர். இந்தத் துள்ளலே நடனத்தின் அடிப்படையாகும்.
 • நடனத்திலிருந்து தான் நாடகம் தோன்றியிருக்க வேண்டும் என்பார் வெல்ஸ் என்ற மேலை நாட்டறிஞர் வேட்டைப் பொருளைத் தூக்கிக் கொண்டு வந்தபின், தம் இனத்தாருக்கு அதனை எவ்வாறு வேட்டையாடினோம் என்பதை உணர்த்த போலியாக ஒரு வேட்டையை நடத்திக் காட்டியிருப்பார். இந்தப் போலச் செய்தலே நாடகத்திற்கு அடிப்படை.
 • பின் சமயம் தொடர்பான ஆடல்-பாடல்கள் வழி நாடகம் வளர்ந்தது.
 • அடுத்து கதை தழுவிய கூத்தாக மாறியது.
 • நாடகம் என்ற கதை தழுவிய கூத்தாக மாறியது
 • நாடகம் என்ற சொல்லை முதன் முதலாக வழங்கியவர் தொல்காப்பியர் “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்” என்பார் அவர்.
 • தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நாடகப் பாங்கான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்கிறது.
 • “கூத்ததாட்டு அவைக் குழாத்து அற்றே” என்ற திருக்குறளும் கூறுகிறது.
 • “பரத நூன்முறை நாடகம் பயனுறப் பகுப்பேன்” என்று கம்பர் கூறுகின்றார்.
 • நாடக மேடை அமைப்பு, மூன்று வகையான திரைச்சீலை மேடையில் அமைக்கப்படும் விளக்கு ஆகியன குறித்துக் கூறும் நூல் சிலப்பதிகாரம்.
 • இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மாதவியைக் பற்றி கூறும்போது “நாடகம் ஏத்தும் நாடக கணிகை” என்று குறிப்பிடுகின்றார்.
 • கூத்து என்பது வளர்ச்சி கண்டபோது தனிப்பாடலுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவது நாட்டியம் என்றும், ஒரு கதையைத் தழுவி வேடம் புனைந்து நடிப்பது நாடகம் என்று பிரிந்து வளர்ந்தது.
 • விளக்கத்தார் கூத்து என்ற நூல் மூன்றாம் தமிழ்ச் சங்கத்தில் இருந்ததாக நக்கீரர் கூறுகிறார்.
 • சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் பரதம், முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல், பஞ்சமரபு, பரதசேனாபதியம், மதிவாணன் நாடகத் தமிழ் குணநூல், கூத்துநூல் போன்ற நாடகம், நாட்டியம் குறித்த நூல்களை குறிப்பிட்டுள்ளார்.
 • வசைக் கூத்து (நாடகம்) குறித்தும் அடியார்களுக்கு நல்லார் கூறுகின்றார்.
 • 7-ம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் மத்தவிலாசம் என்ற நூலை எழுதினான்
 • பரிதிமாற் கலைஞர் நாடகவியல் என்ற நூலை எழுதினார். செய்யுள் வடிவில் எழுதிய நாடகவியல் என்ற இலக்கண நூலானது நாடக விளக்கம், வகைகள், நடிப்பு எழுதும் முறை, நடிக்கும் முறை போன்றவற்றின் இலக்கணம் கூறுகிறது.
 • தவத்திரு விபுலானந்த அடிகள் மதங்க சூளாமணி என்ற தமிழ்நாடக இலக்கண நூலை இயற்றினார்.
 • மறைமலையடிகள் இயற்றி சாகுந்தல நாடக ஆராய்ச்சி என்ற நூலும், சிக்கல்களுக்குத் தீர்வு காண்கிறது.
 • நாடகத்தமிழ் என்ற நூலைப் பம்மல் சம்பந்தனார் இயற்றியுள்ளார்
 • நாடகவியல், மதங்க சூளாமணி, சாகுந்தல ஆராய்ச்சி, நாடகத் தமிழ் என்ற இந்நான்குமே சிறந்த தமிழ் நாடக இலக்கண நாடக இலக்கண நூல்களாக உள்ளன.
 • ராஜராஜேஸ்வர விஜயம் என்பது இராஜராஜ சோழனின் வெற்றியைச் சிறப்பிக்கும் நாடகமாகும். இதன் ஆசிரியர் விஜயராஜேந்திரன்.
 • சோழர் காலத்தில் கமலாயப்பட்டர் எழுதிய நாடகம் புலியூர் நாடகமாகும்.
 • தமிழில் ஆசிரியர் பெயர் தெரிந்த முதல் நாடக நூல் புலியூர் நாடகமாகும்.
 • நாடகத்தன்மை வாய்ந்த சிற்றிலக்கியம் குறவஞ்சியும் பள்ளும் ஆகும்
 • மராட்டிய மன்னர்கள் காலத்திலும், நாயக்க மன்னர்கள் காலத்திலும் கோயில் நாடகம் நடத்தப்பபட்டது.
 • 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகங்கள் தோன்றின.
 • செல்வக் குடியில் பிறந்த ஒருவன் ஒழுக்கங்கெட்டு நோயும் வறுமையும் உற்று இறுதியில் திருந்தி வாழ்வதாக அமையும் நாடகம் நொண்டி நாடகம் எனப்படும்.
 • கோபால கிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரம் இயற்றினார்
 • இவ்விரு நூல்களம் கட்டியங்காரன் உரையாடலோடு முழுவதும் இசைக் கீர்த்தனைப் பாடல்களால் ஆனவை
 • 1867-ல் வெளிவந்த காசி விசுவநாத முதலியாரின் டம்பாச்சாரி விலாசம் என்ற நாடகம் தான் முதன் முதலில் மேடையில் நடிக்கப்பட்ட சமூக நாடகமாகும்.
 • முழுவதும் வசனத்தில் வந்த முதல் நாடகம் 1882-ல் திண்டிவனம் ராமசாமி ராஜா எழுதிய பிரதாப சரித்திர விலாசம் என்ற நாடகமாகும்
 • 1891-ல் பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்ற செய்யுள் நாடகக் காப்பியத்தை எழுதினார்.
 • கதரின் வெற்றி என்ற நாடகந்தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகமாகும். பின் தேசியக்கொடி, தேசபக்தி போன்ற நாடகங்கள் வந்தன.
 • 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “நாடக உலகின் இமயமலை” என்றும் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என்றும் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் தோன்றினார்.
 • பிரகலாதன், சிறுத்தொண்டர், லவகுசா, பவளக்கொடி, அபிமன்யு, சுந்தரி முதலான பல நாடகங்களை சங்கரதாஸ் சுவாமிகள் எழுதினார்.
 • “தமிழ் நாடகத் தந்தை” எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் 90-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார்.
 • சேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களை தமிழில் மொழி பெயர்த்தவர்.
 • இவர் எழுதிய “மனோகரா” என்ற நாடகம் மிகவும் புகழ்பெற்றது.
 • நாடக மேடை நினைவுகள், நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி என்ற தலைப்பில் தம் அனுபவங்களை பம்மல் சம்பந்தனார் நூல்களாத் தந்துள்ளார்.
 • எம். கந்தசாமி முதலியார் அவர்கள் மேனாட்டு நாடகமுறைகளத் தமிழ் நாடகங்களில் புகுத்தியவர்.
 • சேக்ஸ்பியர் இப்சன், மோலியர் போன்ற மேலைநாட்டு ஆசிரியர்களின் நாடகங்களை ஆராய்ந்து நாடக அமைப்பு, பாத்திரப்படைப்புக்கு இணங்க தமிழ்நாடகக் கலைஞர்களை உருவாக்கியர் கந்தசாமி.
 • புதின நாடகங்களை இயற்றி அரங்கேற்றியவர்
 • “புதிய நடிப்புக்கலை ஆசிரியர், தமிழ் நாடக மறுமலர்ச்சியின் தந்தை” என்று டி.கே.சண்முகம் பாராட்டும் சிறப்புகளைப் பெற்றவர் கந்தசாமியாவார்.
 • 1925 முதல் 1950 வரையான 25 ஆண்டு காலம் “நாடகக் கலைமணி நால்வர்” எனப் போற்றப்பட்ட டி.கே.சங்கரன், டி.கே.முத்துச்சாமி, டி.கே.சண்முகம். டி.கே.பகவதி என்ற சகோதரர்கள் நாடக உலகில் அரிய சாதனை நிகழ்த்தினர்.
 • 1942-ல் மதுரையில் “ஒளவையார்” நாடகம் அரங்கேறியது. நாடகம் முழுவதும் ஒளவையாராக நடித்தவர் டி.கே.சண்முகம் ஆவார். அதனால் ஒளவை சண்முகம் என்றே அழைக்கப்பட்டார்.
 • இவர்களுக்குப்பின் நாடகக் கலையை ஏதார்த்தம் பொன்னுசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், நவாப்பு ராஜமாணிக்கம், எஸ்.வி.சங்கரநாமம். ஆர்.மனோகர் போன்றோர் வளர்த்தனர்.
 • பின் அண்ணா, கலைஞர், எம்.ஆர்.ராதா, கே.பாலசந்தர், சோ, எஸ்.பி.சேகர் போன்றோர் வளர்த்தனர், வளர்த்துக் கொண்டு வருகின்றனர்.

இசைக்கலை

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment