நாலடியார்
நூற்குறிப்பு
- நாலடியார் பதினெண்கீழ்ககணக்கு நூல்களுள் ஒன்று
- இந்நூல் 400 பாடல்களை கொண்டது.
- அறக்கருத்துக்களை கூறுவது.
- நாலடி நானூறு என்னும் சிறப்பு பெயரும் இதற்கு உண்டு
- சமண முனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
- இதில் அறத்துப்பால் 13 அதிகாரங்கள், பொருட்பால் 24 அதிகாரங்கள், காமத்துப்பால் 3 அதிகாரங்கள் ஆகும்.
- இது வெண்பாவால் ஆக்கப்பட்ட நூலாகும்.
- இது முத்தரையரைப் பற்றி கூறும் நூல்
மேற்கோள்கள்
- “ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”
- “பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்”
சிறந்த தொடர்கள்
- செல்வம் சகடக்கால் போல வரும்
- கல்வி கரையில கற்பவர் நாள் சில
- பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்
இவற்றில் நான்கு எனப்படுவது நாலடியாரே
இரண்டு எண்பது திருக்குறளையும் குறிக்கும்
- ஜி.யு. போப் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
- கல்வி கரையில் கற்பவர் நாள் சில – என உரைப்பது இதுவே
ஆறாம் வகுப்பு – முதல் பருவம்
நாய்க் கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம் சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும் வாய்க்கால் ஆணையர் தொடர்பு. |
எட்டாம் வகுப்பு – இரண்டாம் பருவம்
கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து |
- சேய் – தூரம்
- செய் – வயல்
- அணியர் – நெருங்கி இருப்பவர்
- அனையார் – போன்றார்