நாலாயிர திவ்விய பிரபந்தம்

நூற் குறிப்பு
- தமிழகத்தின் பழம்பெரும் சமயங்களுள் ஒன்று வைணவம். வைணவம் திருமாலை முழுமுதற் கடவுளாய்க் கொண்டு போற்றும்.
- பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய தேனினும் இனிய தீந்தமிழப் பனுவல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
- பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்விய பிரபந்தம் அவையே வைணவ இலக்கியங்கள் என்று வழங்கப்படுகின்றன.
- பன்னிரு ஆழ்வார்களின் முதல் மூவர் இருண்ட காலத்தில் வாழ்ந்தவர்கள்.
- பிற ஆழ்வார்களின் பெரும்பான்மையோர் கி.பி.600 முதல் கி.பி. 900 வரை வாழந்தவர்கள்
பொய்கையாழ்வார்
- இவரது பாடல்களே முதல் திருவந்தாதி
- தாமரைப் பொய்கையில் பிறந்ததால் பொய்கையாழ்வார் என்ற பெயர் பெற்றவர்.
- திருமால் அம்சத்தில் கண் போன்றவர் இவர்
- முதல் திருவந்தாதி எனும் இவரின் பாக்கள் அந்தாதித் தொடையிலும் நேரிசை வெண்பாவிலும் அமைந்தவை.
பூதத்தாழ்வார்
- இவரது பாடல்கள் இரண்டாம் திருவந்தாதி
- பூதமெனும் சொல்லைக் கையாண்டதால் பூதத்தாழ்வார் எனப் பெயர் பெற்றவர்.
- திருமால் அம்சத்தில் தலை போன்றவர் இவர்
- இவரின் பாடல்கள் அந்தாதித் தொடையிலும் வெண்பா யாப்பிலும் அமைந்தவை.
பேயாழ்வார்
- இவரது பாடல்கள் மூன்றாம் திருவந்தாதி
- இறைவன் மீது பேய்போல அன்பு கொண்டதனால் இவர் இப்பெயர் பெற்றார்.
- திருமால் அம்சத்தில் கண்கள் போன்றவர்
திருமழிசையாழ்வார்
- ஊர் – காஞ்சி அருகில் உள்ள திருமழிசை
- காலம் கி.பி. 8-ம் நூற்றாண்டு
- இவரது பாடல்கள் நான்காம் திருவந்தாதி
- இவருடைய பாக்கள் திருச்சந்த விருத்தம் என்றழைக்கப்படுகின்றன
- திருமாலின் அம்சத்தில் கழுத்து போன்றவர்
பெரியாழ்வார்
- இயற்பெயர் – விஷ்ணுசித்தர்
- திருமால் அம்சத்தில் முகம் போன்றவர்
- இவர் பாடிய திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழியுமாம்
- ஆண்டாளை வளர்த்து அவர் சூடிக் கொடுத்ததை இறைவனுக்கு சூடியவர்
ஆண்டாள்
- ஊர் – பெரியாழ்வாரால் துழாய்க்காட்டில் கண்டடுக்கப்பட்டவர்
- காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டு
- இறைவனைக் காதலனாய்க் கொண்டு நாச்சியார் திருமொழி, திருப்பாவை இரண்டும் பாடினார்
நம்மாழ்வார்
- காலம் கி.பி. 8-ம் நூற்றாண்டு
- பெற்றோர் – மாறன்காரிகை, நங்கை
- பாடியவை – திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாய்மொழி
- திருமாலின் அம்சத்தில் பாதம்போன்று விளங்குபவர்
மதுரகவி ஆழ்வார்
- நம்மாழ்வாரின் பக்தராய் இருந்தவர்
- கண்ணி நுண் சிறுதாம்பு எனத் தொடங்கும் பாடல்களை பாடியவர்
- திருமாலின் அம்சத்தில் பாதம் போன்றவர்
திருமங்கை ஆழ்வார்
- காலம் கி.பி. 8-ம் நூற்றாண்டு
- பாடிய நூல்கள் – பெரிய திருமடல், சிறிய திருமடல், பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை
- திருமாலின் அம்சத்தில் கொப்பூழ் போன்றவர்
தொண்டரடிப் பொடி ஆழ்வார்
- ஊர் – சோழ நாட்டு திருமண்டங்குடி
- இயற்பெயர் – விப்ரநாராயணர்
- பாடியவை – திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
- திருமாலின் அம்சத்தில் மார்பு போன்றவர்
திருப்பாணாழ்வார்
- இவர் நெற்றியில் வடித்த குருதியை இறைவன் நெற்றியிலும் வடித்துக் காட்டியது வரலாறு.
- பாடியவை – அமலனாதிபிரான் பதிகம்
- திருமாலின் அம்சத்தில் கைகள் போன்றவர்
குலசேகராழ்வார்
- ஊர் – திருவஞ்சைக் களம் (கெல்லி நகர்)
- காலம் – கி.பி. 8-ம் நூற்றாண்டு
- சேரநாட்டை ஆண்ட மன்னர் இவர்
- பாடியவை – பெருமாள் திருமொழி
- இராமன் மீது அதிகப் பற்றுக் கொண்டவர்
- திருமாலின் அம்சத்தில் கைகளாய் விளங்கியவர்
பெரியபுராணம்
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related