நேருஜீ – Nehruji
Group 4 Exams – Details
மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்
- நம் நாடு விடுதலை பெற்ற பின் முதல் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு.
- நேருவின் அன்பு மகள் இந்திராகாந்தி.
- நேரு 1922 முதல் 1964 வரை 42 ஆண்டுகள் மகளுக்கு கடிதங்கள் எழுதியுள்ளார்.
- தாகூரின் விசுவபாரதி கல்லூரியில் இந்திராகாந்தி சேர்ந்தபோது அவர் எழுதிய கடிதம் இது (அல்மோரா மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து நேரு இக்கடிதம் எழுதினார்)
- இந்திராகாந்தி பேராசிரியர் கிருபாளினியின் உதவியுடன் பாடங்களைப் படித்தார். புத்தகம் வாசிப்பதை கடமையாகவும், கட்டாயமாகவும் இருக்கக் கூடாது என்று நேரு கூறுகிறார்.
- ஆங்கிலப் படைப்பாளிகள் சேக்ஸ்பியர், மில்டன் பற்றி நேர பெருமைபடக் கூறுகிறார். சுவையானவை, சிந்தனையைத் தூண்டுபவை என்கிறார்.
- மேலும் கிரேக்க நாடகங்கள் ஆர்வத்தைத் தூண்டபவை. சுருக்கமாகவும் வாசிக்க எளிதாகவும் இருக்கும் என்கிறார்.
- காளிதாசரின் “சாகுந்தலம் நாடகம்” மற்றும் டால்ஸ்டாயின்” போரும் அமைதியும்” (இது உலகின் மிகச்சிறந்த நூல்களில் ஒன்று) பற்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- நேருவுக்கு பிடித்த ஆங்கில எழுத்தாளர் பெட்ரண்ட் ரஸ்ஸல். இவரது ஆங்கிலம் அருமையானது. அறிவுபூர்வமான எழுத்தாளர் என்றார்.
- ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை, அதைப் புரிந்து கொள்ளவும், சரியாக வாழவும் புத்தகப்படிப்பு அவசியம் என்றும் கூறுகிறார்.
கேம்பிரிட்ஜ் | இங்கிலாந்தின் பல்கலைக்கழகம் |
சேக்ஸ்பியர் | ஆங்கில நாடக ஆசிரியர் |
மில்டன் | ஆங்கிலக் கவிஞர் |
பிளேட்டோ | கிரேக்க சிந்தனையாளர் |
காளிதாசர் | வடமொழி நாடக ஆசிரியர் |
டால்ஸ்டாய் | ரஷ்ய நாட்டு எழுத்தாளர் |
பெர்னாட்ஷா | ஆங்கில நாடக ஆசிரியர் |
பெட்ரண்ட் ரஸ்ஸல் | சிந்தனையாளர், கல்வியாளர் |
அல்மோரா சிறை | உத்திரராஞ்சல் மாநிலத்தில் உள்ளது |
கிருபாளினி | விசுவபாரதியில் பணிபுரிந்த ஒரு பேராசிரியர் |